உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தினர் சட்டவிரோத குடியேற்றம்: டில்லியில் வீடு வீடாக போலீஸ் சோதனை

வங்கதேசத்தினர் சட்டவிரோத குடியேற்றம்: டில்லியில் வீடு வீடாக போலீஸ் சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியின் வெளிப்புற பகுதியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் யாரும் தங்கி உள்ளனரா என்பதை கண்டறிய போலீசார் வீடு வீடாக சோதனை நடத்தினர். இதில் முறையான ஆவணங்கள் இல்லாமல் 175 பேர் தங்கி உள்ளது தெரியவந்துள்ளது.டில்லியில் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் வெளியிட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், டில்லியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் தங்கி உள்ளதாகவும் அவர்களை கண்டறிய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. அரசியல் கட்சிகளும் கவலை தெரிவித்து இருந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4lvx6xca&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து பள்ளி நிர்வாகங்கள் மாணவர் சேர்க்கையின் போது சட்டவிரோதமாக தங்கி உள்ள வங்கதேசத்தவர் குறித்து அடையாளம் காண வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.இந்நிலையில், டில்லி போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி உள்ளதாக கவலை எழுந்ததைத் தொடர்ந்து, அவர்களை தேடி அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அவ்வாறு தங்கி உள்ளவர்களை பிடித்து வெளியேற்றும் பணி நடக்கும். டில்லியின் வெளிப்புறப் பகுதியில் தொடர்ச்சியாக சோதனை நடத்தப்பட்டது. சிறப்பு போலீஸ் குழுவினர் இச்சோதனையில் ஈடுபட்டனர்.இதில், வீடு வீடாக சென்று சோதனை நடத்தியதுடன், ஆவணங்களும் சோதனை ஆய்வு செய்யப்பட்டன. இதில் 175 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கி உள்ளது தெரியவந்துள்ளது. அவர்களின் ஆவணங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் கூறிய இடங்களில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. இதில் கிடைக்கும் முடிவுகளை வைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் டில்லி போலீசார் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rajkumar
டிச 23, 2024 13:13

இதெல்லாம் ஓரு சாம்பிள் தான். வெஸ்ட் பெங்கால் மூலம் நாட்டின் எல்லா இடத்திலும் ஊடுருவி உள்ளனர் பங்களாதஷ் மக்கள். கேட்டால் பெங்காலி என்று சொல்லி விடுவார்கள். நாட்டுக்கு இவர்களால் கேடு .


Rpalni
டிச 23, 2024 07:59

எதிர்பார்க்கிறோம் பப்புவின் டி ஷர்ட் வாசகம் நான் ஓர் பங்களாதேஷி பப்பியின் பை வாசகம் பங்களாதேஷ்


வாய்மையே வெல்லும்
டிச 22, 2024 20:56

கள்ளக்குடிக்கு "கை " கொடுக்கும் கேடிகள் எங்கிருந்தாலும் சாம்பிராணி புகையுடன் மேடைக்கு வரவும் . உங்க பொன்னான முகத்தை பார்த்து ரசிக்க ஆவல்.. வசமாக மாட்டியபின்னே உங்களோட திருட்டு முழி தான் ஹைலைட்


Kumar Kumzi
டிச 22, 2024 20:03

ஓட்டு பிச்சைக்காக ஓங்கோல் விடியல் பங்களாதேஷ் கள்ளக்குடியேறிகளுக்கு திருப்பூரில் அடைக்கலம் குடுத்து வச்சிருக்கார் சார். சல்லடை போட்டு தேடுங்க


M Ramachandran
டிச 22, 2024 17:57

அவர்களை ஊட்டி வளர்க்க ஒரு திருட்டு கும்பல் இருக்கிறதெ. அது தான் திருப்பூர் மற்றும் கோவை சொர்க்க அவர்களுக்கு பூமியாகா திகழ்கிறதெ என்ன செய்வது.


J.V. Iyer
டிச 22, 2024 17:49

சட்டவிரோத கும்பல்களை இந்தியாவைவிட்டு விரட்டி அடியுங்கள். எங்கள் ஒத்துழைப்பு இருக்கும்.


Vijay D Ratnam
டிச 22, 2024 17:31

சமீபத்தில், NDA அரசாங்கத்தில் உள்துறை இணை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு இந்த பங்களாதேஷிலிருந்து வந்தவர்கள் எண்ணிக்கையை சுமார் இரண்டு கோடி பேர் எனக் கூறியுள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 30,84,826 பேர். சட்டவிரோதமாக பங்களாதேஷிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்று ஆவணம் உள்ளது என்றார். இன்று அந்த கும்பல் ராப்பகலா குட்டி போட்டு குட்டி போட்டு எந்தளவுக்கு பெருத்து போய் இந்தியாவின் பொருளாதாரத்தை, வேலைவாய்ப்பை நாசாமமாக்கி கொண்டு இருக்கும் என்பதை நினைத்து பார்த்தால் அதிர்ச்சியாக இருக்குது. மேற்கு வங்காளம், கேரளம், தமிழகம், ஆந்திரா குறிப்பாக மும்பை தாராவி பெங்களூர், சென்னை, கோயம்பத்தூர், ஹைதராபாத் என்று வீடுவீடாக சென்று போலீஸ் பிடித்து துரத்த வேண்டும்.


Rajah
டிச 22, 2024 16:38

சமூக நீதிக்கு எதிரான விடயங்களில் இந்த அரசு ஈடுபடக் கூடாது என்பது புள்ளிகளின் வேண்டுகோள். தங்களின் வெற்றிக்கு இது இடையூறு விளைவிக்கும் அத்தோடு இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இதில் அம்பேத்காரையும் கொண்டு வருவார்கள். ஏற்கனவே அம்பத்காரின் பதாதைகள் கோடிக்கணக்கில் தயாராகவுள்ளது.


பெரிய ராசு
டிச 22, 2024 16:35

கணக்கை முடியுங்க சல்லிப்பயலுக


raj82
டிச 22, 2024 16:21

They already settled in Kerala and Tamil nadu


சமீபத்திய செய்தி