சட்டவிரோத சுரங்க தொழில் 99 சதவீதம் நிறுத்தம்
பெலகாவி; கர்நாடக மேல்சபையில் பா.ஜ., உறுப்பினர் திப்பேசாமி எழுப்பிய கேள்விக்கு, மாநில சுரங்க துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் அளித்த பதில்:மாநில அரசின் கடுமையான நடவடிக்கைகளால் தற்போது 99 சதவீதம் சட்டவிரோத சுரங்க தொழில் நிறுத்தப்பட்டுள்ளது.இப்போது அனைத்துமே கணினி மயமாக்கப்பட்டதால் எல்லாமே முறைப்படி செயல்படுகின்றன. சட்டவிரோத சுரங்கங்களுக்கு இடமில்லை.மாநிலங்களில் சுரங்க நடவடிக்கைகளுக்கு அதிக வரி விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. இதன் காரணமாக சுரங்க உரிமையாளர்களிடம் வரி வசூலித்து 4,750 கோடி ரூபாயை மாநில அரசின் கஜானாவில் சேர்த்து உள்ளோம்.கடந்த 2015ம் ஆண்டுக்கு முன்பு சுரங்கம் தோன்றுவதற்கு 55 சதவீதமும், 2015க்கு பின் 45 சதவீதமும் வரி விதித்தோம். இந்த வரி மத்திய அரசின் கஜானாவுக்கு சென்றுவிட்டு, மாநில அரசுக்கு திரும்பி வந்தது.தற்போது மாநில அரசிடம் முழு அதிகாரம் இருப்பதால் அரசுக்கு சுரங்க தொழில் மூலம் 4,750 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இது முதலில் கனிம நிதிக்கும், பின், நிதி துறைக்கும் செல்லும்.இவ்வாறு அவர் கூறினார்.