உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா - 2025 மசோதா மீதான விவாதத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டினர் வருகையை நிர்வகிக்க, பாஸ்போர்ட் சட்டம் - 1920, வெளிநாட்டினர் பதிவு சட்டம் - 1939, வெளிநாட்டினர் சட்டம் - 1946 மற்றும் குடியுரிமை சட்டம் என, நான்கு விதமான சட்டங்கள் தற்போது அமலில் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டங்களை ஓரங்கட்டிவிட்டு, புதிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து, சமீபத்தில் லோக்சபாவில், குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா - 2025ஐ தாக்கல் செய்தது.லோக்சபாவில் இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: சுற்றுலா, கல்வி சுகாதாரம் மற்றும் வணிகத்திற்காக இந்தியா வருபவர்களை வரவேற்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளபவர்களை கடினமாக கையாள்வோம்.நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல. நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்காக வருபவர்களை எப்போதும் வரவேற்போம்.இந்த மசோதா, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருளாதாரம் மற்றும் வணிகத்தை ஊக்குவிக்கும். சுகாதாரம் மற்றும் கல்வித்துறைக்கு ஆதரவாக இருக்கும். இந்த மசோதா, இந்தியா வருபவர்களின் அனைத்து தகவல்களும் கிடைப்பதை உறுதி செய்யும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.இதனைத் தொடர்ந்து குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா -2025 லோக்சபாவில் நிறைவேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

veeramani
மார் 28, 2025 10:02

இந்திய அக்காளின் வாழ்க்கை தற்சமயம்தான் முன்னற்றம் உள்ளது. இதில் சில மதத்தை சேர்ந்தவர்கள் அண்டைநாடுகளான மியான்மர், பங்களாதேஷ் , நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் ஆக்ரிமைப்பு செய்கின்றனர். இவர்களுக்கு இந்திய தேசத்தில் இருப்பதற்கு வாழ்வதற்கும் சில மத புரோக்கர்கள் உதவி செய்கின்றனர். இதனால் இந்திய மக்களின் வாழ்வாதாரம் பறிபோகின்றது .எனவே வெளிநாட்டு அகதிகளை ஐந்து வருடங்களில் காட்டாயம் திருப்பி அனுப்பவேண்டும்.


Velan Iyengaar, Sydney
மார் 28, 2025 08:19

வந்தேறிகளுக்கு இது வயிற்றில் புளியைக் கரைக்கும். பேசாம அவங்க தாய் நாட்டிற்கு சென்று விடலாம்


R K Raman
மார் 28, 2025 07:15

இந்த புதிய சட்டம் வர 75 ஆண்டுகள்... முந்தைய ஆட்சிகளின் லட்சணம் இதுதானா? இன்னும் இது போல் எவ்வளவு உள்ளது என்று தெரியவில்லை


Kanns
மார் 28, 2025 06:33

Throw Out Billions of Foreign Infiltrators Given National IDs& Aadhar Citizenship by VoteHungryParties incl BJP& Enjoyong All Govt Services& Freebies Denied to Native Citizens


Rajarajan
மார் 28, 2025 05:30

இப்படி ஒரு சட்டம் இந்தியாவுக்கு மிகவும் அவசியம்.


கோமாளி
மார் 28, 2025 05:23

இலங்கையிலிருந்து வந்தால் அகதி, இந்துவாக வந்தால் அமைதி. இது தானே குடியுரிமை சட்ட திருத்தம்??


visu
மார் 28, 2025 06:49

புரியலையே


visu
மார் 28, 2025 06:54

சட்டத்தை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க இலங்கை தமிழர் திரும்பி செல்ல கூடிய சூழ்நிலை இருந்தால் அதைத்தான் செய்வார்கள் மத வெறியால் பாதிக்கப்பட்டு இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியரல்லாத சிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை உண்டு மற்றபடி எந்த நாட்டினரும் அகதியா வந்தால் அந்த நிலை மாறியதும் திரும்பி செல்ல வேண்டும்


A1Suresh
மார் 28, 2025 01:47

இலங்கை தமிழர்கள் தான் முதல் பயங்கரவாதிகள். அவர்களை தவிர்க்க வேண்டும். தனிநாடு, கிருத்துவ மிஷனரி, தமிழில் அர்ச்சனை, தமிழில் ஆகமம் ஆக மொத்தம் அனைத்து பிரிவினைவாதங்களுக்கும் முதலிடம் அதுவே


naranam
மார் 28, 2025 01:03

மியான்மார் மற்றும் பங்களா தேசிலிருந்து நம் நாடெங்கும் ஊடுறுவியுள்ள பத்து மில்லியன் பேரை முதலில் நாட்டை விட்டு வெளியேற்றவும்.


MARUTHU PANDIAR
மார் 27, 2025 23:34

செயின் பறிப்பு, மற்றும் பலவித கொள்ளைகளை அரங்கேற்றி வரும் ஈரானியர்கள், திருப்பூர் மற்றும் எல்லா இடங்களிலும் மிக மிக சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் போதைப்பொருள் கடத்தும் நைஜீரியா மற்றும் பல நாட்டு ஆப்பிரிக்கர்கள் கும்பல், இவர்கள் எல்லாம் உள்துறை கண்ணில் படவே படாதா ?


Ramesh Sargam
மார் 27, 2025 23:15

நாட்டின் அச்சுறுத்தலுக்கு காரணமாக உள்ளவர்கள் அடித்து துரத்தப்பட வேண்டும். அவர்களை அரவணைத்து வாக்கு வங்கியை உயர்த்த நினைப்பவர்களும் அடித்து துரத்தப்படவேண்டும்.


புதிய வீடியோ