உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரி; தற்காலிகமாக ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு

பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரி; தற்காலிகமாக ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிதம் பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அது போதாது என்று ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முன்வைத்து மேலும் 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரியை அவர் விதித்தார். டிரம்பின் வரி அறிவிப்பால் இந்திய ஜவுளித்துறையில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பினர், தொழில்துறையினர், பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். பிற நாடுகளில் இருந்து இந்திய ஜவுளித்துறையினர் இறக்குமதி செய்யும் பருத்தி மீதான 11சதவீத வரியை ரத்து செய்யுமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலினும் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆக.19ம் தேதி முதல் (அதாவது இன்றிலிருந்து) செப்.30 வரை இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பருத்தி மீதான வரியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ManiMurugan Murugan
ஆக 19, 2025 23:18

பருத்தி விளைச்சல் பாரத த்தின் ஆதி கால பயிர். அதன் விளைச்சலை ஊக்குவிக்க வேண்டும். வேளாண்துறை இதில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்.


அப்பாவி
ஆக 19, 2025 15:18

போனவருசம் ஈஜிபுத்து வெங்காயம் எறக்குமதி பண்ணி வெவசாயிகள் நலம் காத்தாங்க. இந்த வருசம் பருத்தி மீது வரி குறைச்சு விவசாயிகள் நலம் காப்பு.


தென்காசி ராஜா ராஜா
ஆக 19, 2025 13:03

ஒ ஸ்டாலினும் வலியுறுத்தினார்.நல்லாத போச்சு


SATHYA S
ஆக 19, 2025 12:57

Anyways you not going to accept this .


Raja k
ஆக 19, 2025 12:19

இதுதான் இந்திய விவசாயிகளை காக்க எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்று மோடி சொன்னது, இறக்குமதி மீதான 11% வரி நீக்கம் என்பது, அமெரிக்காவில் இருந்து சுபிமா என்ற பருத்திவகை அதிகளவில் இந்தியாவில் இறக்குமதி ஆகும், அமெரிக்காவுக்கு அடிபணிந்துதான் ஆகவேண்டும் மோடி அவர்களே, அமெரிக்க விவசாய பொருட்களுக்கா இந்திய சந்தையை மோடி திறந்துவிட்டார், இந்திய பருத்தியை விட அமெரிக்க பருந்தி நீண்ட இழைகளை கொண்டது, வரி இல்லாததால் இனி அமெரிக்க பருத்தி இஸ்டம்போல இந்தியாவில் இறக்குமதி ஆகும்


ManiMurugan Murugan
ஆக 19, 2025 23:21

பருத்தி நெய்யப்பட்டு ஆடை எங்கு செல்கிறது. அமெரிக்காவிற்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை