உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி 3.0-வில் மிரளவைக்கும் பொருளாதார வளர்ச்சி: 100 நாளில் அப்படியொரு முன்னேற்றம்

மோடி 3.0-வில் மிரளவைக்கும் பொருளாதார வளர்ச்சி: 100 நாளில் அப்படியொரு முன்னேற்றம்

புதுடில்லி: சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) நடப்பு நிதியாண்டில் (2024-25) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8 சதவீதமாக இருக்கும் என கடந்த ஏப்ரலில் கணித்திருந்தது. ஆனால், பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்றதும், இந்த மதிப்பு அதிகரித்தது. அதாவது, ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்றதும் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், திட்டங்கள் போன்றவற்றை கணக்கில் கொண்டு கடந்த ஜூலையில் ஐ.எம்.எப் வெளியிட்ட 'வேர்ல்டு எகானமிக் அவுட்லுக்' அறிக்கையில் ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி), மேலும் 20 புள்ளிகள் உயர்ந்து 7 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை விட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியால் என்னவெல்லாம் நடக்கும்?ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வேகமாக வளரும் போது, ​​வணிகங்கள் விரிவடைந்து வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகள் கிடைக்கப்பெறும். இதனால் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும். 2017-18 முதல் 2021-22 வரை இந்தியாவில் 8 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. கொரோனா போன்ற கொடிய தொற்று காலத்திலும் கூட சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதற்கு பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் செயல்திறனே காரணம். பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்று 100 நாட்களில் மத்திய அரசு மேற்கொண்ட பணிகள், கொண்டுவரப்பட்ட திட்டங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என அனைத்தும் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிந்து வருகின்றன. இதே வேகத்தில் இந்திய பொருளாதாரம் செல்லும் பட்சத்தில், விரைவில் மோடியின் கனவான 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

T.sthivinayagam
செப் 18, 2024 21:42

மன்னிப்பு கேட்டு வாழமறுக்கும் பிரபஞ்ச சூஷ்மத்தை வெல்லகூடிய ஹிந்து


தாமரை மலர்கிறது
செப் 18, 2024 21:27

இந்தியாவின் பொருளாதாரம் பத்து ட்ரில்லியன் டாலரை நோக்கி விரைந்து பாய்கிறது. பிளம்பர், மெக்கானிக், எலெக்ட்ரிசின், கட்டிட தொழில்கள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் கோடிக்கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன. சரியான துறையை எந்த இளைஞர் தேர்ந்தெடுத்தாலும், லட்சக்கணக்கில் சம்பாரிக்க முடிகிறது. ஐடி துறையில் லட்சக்கணக்கில் பலர், கோடிகளில் சில இளைஞர்கள் சம்பாரிக்கிறார்கள். இந்தியா பொற்காலமாக இப்போது திகழ்கிறது. இன்னும் பத்தாண்டில், சீனாவை தாண்டி செல்லும். ஒரு இருபத்தைந்து வயது இளைஞர் இன்றைய இந்தியாவில் பல லட்சங்களை புரட்ட முடிகிறது. குழந்தைகள் பள்ளிக்கு போவதற்கு அம்மாவிடம் ஆயிரங்களில் பாக்கெட் மனி வேண்டும் என்கிறார்கள். அந்தளவிற்கு பொருளாதாரம் விண்ணளவிற்கு உயர்ந்துள்ளது. விலைவாசி குறைந்து வருகிறது.


malar mannan
செப் 18, 2024 20:58

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.


Narayanan Muthu
செப் 18, 2024 19:43

எல்லாமே இருக்கும் வரும் போகும் என ஆருடம்தான். நிஜத்தில் ஸிரோ தான். கடந்த பத்து வருடத்தில் பரிதாபத்திற்குரிய பொது ஜனம் வருமானம் எல்லாமே வரி பயங்கரவாதத்திற்கு ஈடு கொடுத்து திணறி வருவதுதான் கண்கூடு. வரும் ஆனா வராது கதைதான்.


Sathyanarayanan Sathyasekaren
செப் 18, 2024 21:08

கொத்தடிமை நாராயணன் முத்து 2014 கு முன் நீ வரி கட்டியதே இல்லையா? பாக்கிஸ்தான்இல் வரியே இல்லையாம் அங்கே சென்றுவிடு . தமிழகத்தில் திருட்டு திராவிட கழிசடைகள் ஏற்றிய வரிகளிலும், மின் கட்டணம், பல் விலை, பேரூந்து கட்டணம் ஆகிவற்றை ஏற்றியதால் தான் நீ சொன்ன பொதுஜனம் திணறி வருகிறார்கள். வெட்கமில்லாமல் சொரணையில்லாமல் திரும்ப திரும்ப பொய்யை சொல்லாதே.


Yaro Oruvan
செப் 18, 2024 21:12

ஆத்தாடி.. புல்லரிக்குது நாராயணா


venugopal s
செப் 18, 2024 19:42

ஆரம்பித்து விட்டனர், தானே ஆடி தானே மெச்சிக் கொள்வதை விட மாட்டார்கள் போல் உள்ளதே!


Hari
செப் 18, 2024 19:54

Venu will. Get only 200.... gelusil one ltr


Yaro Oruvan
செப் 18, 2024 21:13

200 ஓவாய்க்கு டைம் ஒட்டு உழைக்கும் நம்ம உப்பி மாம்ஸுக்கு ஒரு ஓ போடுங்க


Anu Sekhar
செப் 18, 2024 19:41

மோடி நாட்டுக்காக உழைக்கிறார். இந்த திராவிட கும்பல் எவ்வ்ளளவு கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போடுகிறது. மக்களே கண்ணை திறந்து இப்பவாவது பாருங்கள்.


Dharmavaan
செப் 18, 2024 18:35

இந்த போலி வாதத்தை உண்மை என நம்பும் மூடர்கள் ஒட்டு போடுவார்கள் . கொத்தடிமைகள் விளம்பரப்படுத்தும்


ஆரூர் ரங்
செப் 18, 2024 18:56

ஆனா கடாக்கட் 8500 வாக்குறுதி, யுனஸ்கோ சாக்ரட்டீஸ் பட்டம் போல எல்லாத்தையுமே நீங்க நம்புறீங்க. (அந்த இலவச 2 ஏக்கர் கிடைச்சுதா?)


Chandran,Ooty
செப் 18, 2024 19:20

சமச்சீர் அறிவாலய அடிமைக்கு மூளை வளர்ச்சி என்பது முழுமையடைவது இல்லை என்பதற்கு உமது கருத்து சிறந்த உதாரணம்.


கனோஜ் ஆங்ரே
செப் 18, 2024 18:27

ஓவர் பில்டப்பு... உடம்புக்கு ஆகாது சாமியோவ்...? ஜெய் ஸ்ரீ ராம்...


Shekar
செப் 18, 2024 18:35

ஆமாங்க, ரெம்ப ஓவர், நம்ம விடியலார் அமெரிக்கா போயிட்டு வந்ததுதான் இதற்கு காரணம். அத முழுசா மறைச்சிட்டாங்க பாத்தீங்களா.


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
செப் 18, 2024 19:23

இந்திய எதிர்ப்பு மூர்க்கர்களுக்கு எல்லாம் பாரத நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாது பாகிஸ்தானுக்கு நீ பேசாம ஓடிப்போயிரு..


Hari
செப் 18, 2024 19:33

One litre jelusil parcel to kanoj ... This much we can do


Yaro Oruvan
செப் 18, 2024 21:14

சார் சார் கெளம்பு காத்து வரட்டும்


rajan_subramanian manian
செப் 18, 2024 18:21

இது ஈவேரா சிந்தனைகள், அண்ணாவின் எண்ணங்கள்,கருணாநிதியின் திட்டங்கள், முதல்வரின் திராவிட சித்தாந்தங்கள், மற்றும் நாளைய துணை முதல்வரின் சனாதன எதிர்ப்பு பிரச்சாரங்கள் ஆகியவை மூலம் ஒன்றிய அரசு சாதிக்க முடித்தது என்பதை இந்த மக்கள் நினைவில் கொண்டு அடுத்து வரும் தேர்தலில் எல்லா தொகுதியிலும் கழகத்தை வெற்றிபெற செய்வார்கள் என நம்புகிறேன். முடியல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை