உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைநகரில் ஒரு வாரத்தில் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

தலைநகரில் ஒரு வாரத்தில் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

புதுடில்லி: டில்லியில் இன்று ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான கொகைன் போதை பறிமுதல் செய்யப்பட்டதை சம்பவத்தை தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் தலைநகரில் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தலைநகர் டில்லியின் மேற்கு பகுதியான ரமேஷ் நகரில் இன்று போதை பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு ரெய்டு நடத்தி 200 கிலோ கொகைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 2000 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது.முன்னதாக கடந்த 02ம் தேதியன்று டில்லியின் தெற்கு பகுதியில் போலீசார் சோதனை நடத்தி 500 கிலோ கொகைன் போதை பொருளை பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து கடந்த 06-ம் தேதியன்று டில்லி திலக் நகர் பகுதியில் 400 கிலோ ஹெராயின் மற்றும் 160 கிராம் கொகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து ஆப்கனை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.அதேநாளில், டில்லி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்புள்ள 1,660 கிராம் கொகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து, லைபீரியாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் தலைநகரில் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பல் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Lion Drsekar
அக் 11, 2024 11:39

நல்லவேளை நாம் பிழைத்துக்கொண்டோம் , வீட்டு வரி, மின்சார கட்டணம், பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் என்று கேட்க்கும்போதேல்லாம், ஒன்று மற்ற குறுநில மன்னர்கள் ஆட்சியை மேற்கொள் கட்டி அண்டை நாட்டையும் மேற்கொள் காட்டி மக்களை திசை திருப்பி வந்த நேரத்தில் இந்த போதை பொருளுக்கு இப்போது ஒரு முறியாட்சி கிடைத்துவிட்டது, இனி கவலை இல்லை, அங்கு பிடிபட்டஹே விட இங்கு குறைவுதான் என்று குரல் கொடுப்போம் , வந்தே மாதரம்


சாண்டில்யன்
அக் 11, 2024 09:03

இந்த கடத்தலுக்கு ஆம் ஆத்மியின் அலட்சியமே காரணம் அந்த முதல்வர் பதவி விலக வேண்டும்னு இன்னும் சொல்லலியே


karunamoorthi Karuna
அக் 11, 2024 08:58

தமிழ் நாட்டில் திமுக கட்சியின் வெளிநாட்டு அமைப்பு நிர்வாகி ஜாபர் சாதிக் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஐ டி செல் நிர்வாகி .


ஆரூர் ரங்
அக் 11, 2024 08:09

இதுவே டுமி நாடாக இருந்திருந்தால் கடத்தல் ஆளை கவுரவித்து அயலக அணிப் பதவியளித்திருப்பார்கள்.


Kasimani Baskaran
அக் 11, 2024 05:40

போதைப்பொருள் விநியோகிப்போருக்கு சிங்கப்பூர் போல மரண தண்டனை கொடுத்தால் பயத்தில் போதை மருந்துகளில் புழக்கம் குறைய வாய்ப்புண்டு.


Mohan
அக் 10, 2024 23:41

தலைநகர் முழுவதும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்தால் இந்த நிகழ்வுகள் நிகழாது தடுக்கலாம். போதை மருந்துகள் பஞ்சாப் மாநிலத்தில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. எனவே பொறுப்பை தடடடிக்கழிக்க மாநில அரசு முயற்சிக்க வேண்டாம்.


Dhurvesh
அக் 10, 2024 22:13

இப்ப தெரிகிறது டெல்லி குஜராத் தான் இந்தியா முழுமைக்கும் சப்ளை என்று


Mohan
அக் 10, 2024 21:41

முஸ்லீம் நாடுகள் போலவும், சிங்கப்பூர் போலவும் ,zero tolerance for drugs என கொள்கை முடிவாக அறிவித்து, போதை மருந்து கடத்தல் செய்பவர்களை தூக்கில் போடுவது அல்லது 50 /100 வருடம் கடுங்காவல் என அரசு ஆணை வெளியிட வேண்டும். அதற்குபின் சிக்குபவர்களுக்கு எந்த விசாரணையும் இல்லாமல் ""சிங்கப்பூர் பிரம்படி""" தண்டனை தர வேண்டும். அத்தனை போதை கடத்தல்களும் ஓய்ந்து விடும். பெண்களை பலாத்காரம் செய்பவர்களுக்கும் இதே மாதிரி தான் தண்டனை தர வேண்டும். பத்து பிரம்படி வாங்கினால் பலாத்காரம் செய்தவன் வாழ்நாள் முழுவதும் கூனிக் கொண்டே நடக்க வேண்டும்.


Sathyanarayanan Sathyasekaren
அக் 10, 2024 23:01

போதை பொருட்களின் தொழிற்சாலை, ஆப்கான், பாக்கிஸ்தான் போன்ற முஸ்லீம் நாடுகள் தான்.


சாண்டில்யன்
அக் 11, 2024 15:21

மகாபாரத காலத்திலேயே ஆபிகானிஸ்த்தானில் நம் மூதாதையர்கள் பெண் எடுத்துள்ளார்கள் அதனாலதான் உள்நாட்டில் ஏழை மக்களுக்கு ரேஷன் தரக்கூடாது இலங்கைபோல திவாலாகி விடுவோம்னு சொன்ன இந்திய அரசு அங்கு தலிபான் ஆட்சி அமைந்தவுடன் ஐம்பதாயிரம் டன் கோதுமையை பாக்கிஸ்த்தான் வழியாக அனுப்பி வைத்தது


சாண்டில்யன்
அக் 10, 2024 21:37

என்ன இருந்தாலும் பாரதநாட்டின் தலை நகரமல்லவா அதுக்கேத்தாப்ல கவ்ரவமாயிருக்க வேண்டாமா அதான்


அன்பு
அக் 11, 2024 03:10

நம்ம திராவிட மாடல் டுமீல் நாடு அரசு கவுரத்தைக் காக்க போதைப் பொருட்கள், கள்ளச் சாராயம், விஷ சாராயம், என்று விற்பனை செய்கிறது.


Sudha
அக் 10, 2024 21:03

பேர் போடமாட்டிங்க போல, பரவாயில்லை எந்த போலீஸ் பிடிச்சாங்க? கவர்னர் போலீஸ் அல்லது அதிஷி போலீஸ்? பேசாம தலைநகரை மாத்துங்க


சாண்டில்யன்
அக் 11, 2024 09:08

டெல்லி காவல்துறை ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில்தான் உள்ளது அதனால்தான் இந்திய வரலாற்றில் இடம்பெறும் நிகழ்வாக டில்லி முதல்வர் வீட்டையே அபகரிக்க முடிந்தது .


சமீபத்திய செய்தி