உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் கள்ளச்சாராயம் குடித்த 25 பேர் பரிதாப பலி

பீஹாரில் கள்ளச்சாராயம் குடித்த 25 பேர் பரிதாப பலி

பாட்னா, பீஹார் மாநிலத்தின் சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பீஹார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மது விலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கடந்த 15ல் சிவான் மாவட்டத்தில் உள்ள மகார் மற்றும் அரியா கிராமங்களைச் சேர்ந்த பலர் அப்பகுதியில் சாராயம் குடித்தனர். அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் நெஞ்சு எரிச்சல், பார்வையிழப்பு போன்ற பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதேபோல், சரண் மாவட்டத்தில் உள்ள மஷ்ராக் பகுதியில் இப்ராகிம்பூரைச் சேர்ந்த ஐந்து பேர் கள்ளச்சாராயம் குடித்ததால் பலியாகினர். இந்த இரு மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீஸ் உயர் அதிகாரிகள், சம்பவம் நடந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த மூன்று போலீசாரை சஸ்பெண்ட் செய்தும், ஐந்து போலீசாருக்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பிஉள்ளனர். இந்நிலையில், கள்ளச்சாராய பலிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.எட்டு ஆண்டுகளுக்கு முன் மது விலக்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஆளுங்கட்சி பிரமுகர்கள் மற்றும் போலீசார் ஆதரவுடன் மது விற்பனை நடைபெறுவதாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை