உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானாவில் போலீஸ் அதிகாரி தற்கொலை: ஐபிஎஸ் அதிகாரி மரணம் குறித்து திடுக் தகவல்

ஹரியானாவில் போலீஸ் அதிகாரி தற்கொலை: ஐபிஎஸ் அதிகாரி மரணம் குறித்து திடுக் தகவல்

சண்டிகர்: ஹரியானாவில் சைபர் செல் பிரிவில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தில், ' தற்கொலை செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி புரன் குமார் ஊழல் செய்தவர் என்றும், உண்மை வெளிப்பட்டு விடும் என்ற பயத்தினால் தற்கொலை செய்து கொண்டார் ' எனத் தெரிவித்துள்ளார்.ஹரியானாவில் காவல் பயிற்சி மைய அதிகாரி புரன்குமார்(52) அக். 7 ஆம் தேதி தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பாக அவர் 8 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். இந்த கடிதத்தை டிஜிபி சத்ருஜித் கபூர், ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜார்னியா ஆகியோருக்கு எழுதியிருந்தார். கடிதத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் தம்மை ஜாதி ரீதியாக பாகுபாடு செய்து துன்புறுத்துவதாக குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து ரோஹ்தக் எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டிஜிபி சத்ருஜித் கபூர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.இந்நிலையில் ரோஹ்தக்கில் உள்ள சைபர் செல் பிரிவில் ஏஎஸ்ஐ ஆக பணியாற்றி வந்த சந்தீப் குமார் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதி வைத்த கடிதத்தில், '' உண்மைக்காக எனது வாழ்க்கையை தியாகம் செய்கிறேன். புரன்குமார் ஊழல் அதிகாரி. தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெளிப்பட்டு விடும் என்ற பயத்தினால் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. அவரது தற்கொலை வழக்கில் நான் கைது செய்யப்படுவேன் என்ற அச்சம் உள்ளது. நான் இறப்பதற்கு முன்னர் ஊழல் அமைப்பை வெளிப்படுத்த விரும்பினேன். பாரபட்சமற்ற விசாரணை வேண்டி எனது வாழ்க்கையை தியாகம் செய்கிறேன். ஊழல் குடும்பம் தப்பிவிடக்கூடாது. தனது கடமையில் இருந்து தப்பித்துக்கொள்ள புரன் குமார் ஜாதி அரசியலை பயன்படுத்தினார்''. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார். வீடியோ பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரை குற்றம்சாட்டி மற்றொரு போலீஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடலை வழங்க மறுப்பு

இதனிடையே, தற்கொலை செய்து கொண்ட சந்தீப் குமாரன் உடலை அவரது குடும்பத்தினர் போலீசிடம் வழங்க மறுத்துவிட்டனர். உடலை தகனம் செய்வதற்காக, அவரது சொந்த ஊரான லட்ஹட் பகுதிக்கு சென்று சென்றனர். இதனையடுத்து உடலை பெறும் முயற்சியில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

GMM
அக் 14, 2025 21:52

வன்கொடுமை, தீண்டாமை சட்டம் நாடு முழுவதும் உடன் நீக்க வேண்டும். மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும், காங்கிரஸ் கட்சி இட ஒதுக்கீடு, தீண்டாமை , சிறுபான்மை போன்று நீண்டகாலம் பிரச்சனை ஏற்படும் சட்டதை கால நிர்ணயம் இல்லாமல் உள்நோக்கதுடன் மக்களை பிளவுபடுத்த கொண்டு வந்தது. இதனை வளரவிடுவது பிஜேபியின் நோக்கம் வெற்றி பெறாது. சட்டம் மூலம் நீக்க வேண்டும். ஓட்டு போட தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
அக் 14, 2025 19:04

அது உம்மோட கும்பல் பாஸ்


K V Ramadoss
அக் 14, 2025 18:57

இதிலும் எதோ சதி இருக்க வாய்ப்பு உள்ளது... கடிதம் நம்பும்படியாக இல்லை..


ஜெய்ஹிந்த்புரம்
அக் 14, 2025 17:15

உண்மைக்காக எனது வாழ்க்கையை தியாகம் செய்கிறேன். - இது நம்புற மாதிரி இல்லையே போலீஸ்காரன் உண்மைக்காக ஒரு .. தரமாட்டான், உசிரை கொடுத்தானாம்


KavikumarRam
அக் 14, 2025 18:53

திராவிட மாடல் போலீசை இருப்பாரு போல. அப்படி இருந்தாலும் மான ரோசம் எல்லாம் இரூக்கப்படாதே. அடுத்தவனை தான கொல்லுவானுங்க.


sekar ng
அக் 14, 2025 17:08

எல்லா இடத்திலும் இணைந்து செயல்பாடுவது ஊழலுக்கு துணை போவது ஒன்றே வழியா


N Sasikumar Yadhav
அக் 14, 2025 16:40

ஊழல்வாதிகள் அனைவருமே இப்படி ஜாதி பின்னால் ஒலிந்துக் கொண்டு நேர்மையாளர்களை பழிவாங்குகிறார்கள் தமிழக திருமாவளவன் மாதிரி


sekar ng
அக் 14, 2025 17:10

இட ஒதுகீட்டை ஒழித்து திறமைக்கு வழி விடவேண்டும். அதுதான் தேச வளர்ச்சிக்கு உதவும்.


Natchimuthu Chithiraisamy
அக் 14, 2025 16:15

பணம் பயம் இது அரசியில் வாதிகளுக்கு இல்லை ஏன் ? சாவும் இல்லை ஏன் ? திட்டம் தீட்டி மக்கள் பணத்தில் 25 % மட்டும் எடுக்கிறார்கள்.


சமீபத்திய செய்தி