உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வருமானம் அதிகரிப்பு

அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வருமானம் அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டில், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வருமானம், 2022- - 23ம் நிதியாண்டில், 223 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அரசு சாரா அமைப்பான ஏ.டி.ஆர்., நேற்று வெளியிட்ட அறிக்கை:

நாட்டில், 22 மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத, 739 அரசியல் கட்சிகளின், 2022 - 23ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 501 கட்சிகளுக்கு மட்டுமே தணிக்கை மற்றும் பங்களிப்பு அறிக்கைகள் உள்ளன. இந்த கட்சிகளின் வருமானம், 223 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல் 10 இடங்களில், குஜராத்தைச் சேர்ந்த ஐந்து கட்சிகள் உள்ளன.முதல் 10 இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் மொத்த வருமானம் 1,582 கோடி ரூபாயாக உள்ளது. இதில், பாரதிய தேசிய ஜனதா தளம் கட்சி, 576 கோடி ரூபாய் வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளது. 416 கோடி ரூபாய் வருமானத்துடன், சத்யவாடி ரக் ஷக் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. நியூ இந்தியா யுனைடெட் கட்சியின் வருமானம், 404 கோடி ரூபாயாக உள்ளது.இந்த வருமானம் அனைத்தும், நன்கொடையாக பெறப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து, டில்லி, பீஹாரில் உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Padmasridharan
ஜூலை 19, 2025 04:54

வாய் / கை சண்டை போடற கட்சிகள் சிலவே. ஆனால் வோட்டு போடற சமயத்துல வாக்குக்குச்சாவடியில நிறைய கட்சிகளின் பெயர்கள் / சின்னங்கள் காணப்படுகின்றன. இது அவர்களுக்கே வெளிச்சம் சாமி, ஏன் இப்படியென்று. இதனால் நேரத்தை ஒதுக்கி வோட்டு போடுவது வீணாகிறது. இதில் NOTA வும் அடங்கும்


M Ramachandran
ஜூலை 19, 2025 00:47

லெட்டர் பேட் காட்சிகள் தேர்தல் நேரத்தில் தான் உலா வரும் சில திருட்டு கட்சிகளின் பினாமியாக. கள்ளப்பணம் தேர்தலில்காட்டி தேர்தல் கம்மிஷினை ஏமாற்ற உதவுவார்கள். அதற்க்கு சன்மானம் கிடைக்கும். அது தான் புற்றீசல் போல் கிளம்பு கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை