உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா தேர்தலில் இண்டி கூட்டணியாக மீண்டும் ஒன்றிணைவோம்; காங். எம்.பி. பதில்

லோக்சபா தேர்தலில் இண்டி கூட்டணியாக மீண்டும் ஒன்றிணைவோம்; காங். எம்.பி. பதில்

புதுடில்லி: இண்டி கூட்டணி ஒற்றுமையாக தான் இருக்கிறது. லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணி மீண்டும் ஒன்றிணையும் என்று காங்கிரஸ் எம்.பி., ராஜிவ் சுக்லா கூறி உள்ளார்.புதுடில்லி சட்டசபை தேர்தலில் வரலாற்று வெற்றியை பா.ஜ., பதிவு செய்துள்ளது. தேர்தல் முடிவுகளை பா.ஜ., தலைவர்கள், நிர்வாகிகள் கொண்டாடி வரும் வேளையில், தோல்விக்கு பல காரணங்களை ஆம் ஆத்மி தெரிவித்து வருகிறது. இண்டி கூட்டணியாக போட்டியிடாமல், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்தனியே களம் கண்டதே ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந் நிலையில், இண்டி கூட்டணி ஒற்றுமையாக தான் இருக்கிறது. லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணி மீண்டும் ஒன்றிணையும் என்று காங்கிரஸ் எம்.பி., ராஜிவ் சுக்லா கூறி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது; இண்டி கூட்டணி என்பது லோக்சபா தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் சட்டசபை தேர்தலின் போது சுயமாக முடிவு எடுக்கும் அளவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் வரும்போது, இண்டி கூட்டணி குறித்த பேச்சு மீண்டும் தொடங்கும். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ