வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஓடி ஒழிய இடம் தேடி அலையும் கும்பல்
எக்ஸ் மட்டுமல்ல அதையும் முடக்கணும்
பாக்., பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் கணக்கை முடக்கியது - பிஜேபியின் பதிலடி இனிமேல் இப்படி தான் இருக்கும்.
புதுடில்லி: '' பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பின் எக்ஸ் வலைதள பக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தால், நாடே கடும் கோபத்தில் இருக்கிறது. இதனையடுத்து அந்நாட்டின் மீது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ள மத்திய அரசு, அந்நாட்டை சேர்ந்த பல சமூக வலைதள பக்கங்களுக்கு இந்தியாவில் தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.இச்சூழ்நிலையில், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அளித்த பேட்டி ஒன்றில், பல தசாப்தங்களாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்து ஆதரவு அளித்து உள்ளதாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இதற்கு ஐ.நா.,வில் பாகிஸ்தானை கடுமையாக சாடியா இந்தியா, ' உலகளாவிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மோசமான நாடு' எனக்கூறியிருந்தது.இந்நிலையில் கவாஜா ஆசிப்பின் 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்திற்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஓடி ஒழிய இடம் தேடி அலையும் கும்பல்
எக்ஸ் மட்டுமல்ல அதையும் முடக்கணும்
பாக்., பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் கணக்கை முடக்கியது - பிஜேபியின் பதிலடி இனிமேல் இப்படி தான் இருக்கும்.