உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனிதநேயம் மூலம் மட்டுமே இந்தியா விஸ்வகுருவாக மாற முடியும்: மோகன் பகவத் பேச்சு

மனிதநேயம் மூலம் மட்டுமே இந்தியா விஸ்வகுருவாக மாற முடியும்: மோகன் பகவத் பேச்சு

பெங்களூரு: மனிதநேயம் மூலம் மட்டுமே இந்தியா விஸ்வகுருவாக மாற முடியும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது: சமூகம் சட்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்குவதில்லை. சமூகம், உணர்திறன் அடிப்படையில் இயங்குகிறது. சொந்தம் என்ற உணர்வு இருக்கிறது. இந்தச் சொந்தம் என்ற உணர்வு நம் அனைவரின் அடிப்படை இயல்பு. அனைத்து மக்களிடமும் உள்ளது, இதை நமது பாரம்பரியம் ஆகும். இதை இன்று அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.இந்தியாவின் தலைமையின் சாராம்சம் அதிகாரத்திலோ அல்லது செல்வத்திலோ இல்லை. மாறாக இரக்கம் மற்றும் பிறரைக் கவனித்துக் கொள்ளும் திறன் ஆகியவற்றில் உள்ளது.இந்தியா தனக்குள்ளும் மற்றவர்களிடமும் மனிதநேய உணர்வை மீண்டும் தூண்டும்போதுதான், உண்மையிலேயே ஒரு விஸ்வகுருவாக மாற முடியும்.நாம் உலக குருவாக மாற விரும்பினால், முதலில் அவர்களிடம் இருப்பதைப் புரிந்துகொண்டு பாராட்ட வேண்டும். பின்னர் அவர்களிடம் இல்லாததை நம்மிடம் வைத்திருப்பதை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய உலகம் லாப நஷ்டங்களை மட்டுமே பார்க்கிறது. நாம் கணக்குப் பதிவைத் தொடங்கினால், தன்னார்வ வேலைகள் கூட நடக்காது. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
நவ 08, 2025 06:57

தகுதிக்கு 50-60% கண்டிப்பாக கொடுத்தால் அடுத்த நூற்ராண்டுக்குள் இந்தியா விஸ்வகுருவாக மாறி விடும். 70% இடம் கொடுத்தால் இன்னும் 20 ஆண்டுகளில் சாத்தியம். இப்பொழுது இருக்கும் ஏற்பாட்டில் சாத்தியமில்லை.


naranam
நவ 08, 2025 03:21

இந்த விஸ்வகுரு என்கிற பேச்சை அடியோடு நிறுத்தவேண்டும். பொருளாதாரம் ராணுவ பலம், மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை மிகப் பெரிய அளவில் உயர்த்துவதன் மூலமே இந்தியாவை உலக நாடுகள் மதிக்கும். ஐநா பாதுகாப்புச் சபையில் கூட இடம்பெற முடியவில்லை..


ஜெய்ஹிந்த்புரம்
நவ 07, 2025 23:19

இந்து மனிதர்களாக இருப்பது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் விரும்புகிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.


குமார்
நவ 07, 2025 22:45

ஆர்எஸ்எஸ் பன்னாட்டு அமைப்பு பல்வேறு தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது


புதிய வீடியோ