உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அகதிகளாக சென்றவர்களின் பாதுகாப்புக்காக புது சட்டம்: மத்திய அரசு திட்டம்

அகதிகளாக சென்றவர்களின் பாதுகாப்புக்காக புது சட்டம்: மத்திய அரசு திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பல்வேறு காரணங்களுக்காக அகதிகளாக வெளிநாடு சென்றவர்களின் பாதுகாப்புக்காக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 104 பேர், அந்நாட்டின் ராணுவ விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டு விமானத்தில் ஏற்றி அழைத்து வரப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.இந்நிலையில், வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்காக இடம்பெயர்ந்து செல்பவர் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.இது தொடர்பாக 'Overseas Mobility (Facilitation and Welfare) Bill, 2024' என்ற மசோதா, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான வெளியுறவுக் கொள்கைகளுக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.இந்தியா அழைத்து வரப்பட்டவர்கள் தொடர்பாக சசி தரூர் கூறியதாவது: சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது என்பது வழக்கமான நடவடிக்கை தான் என்றாலும், அவர்களை நடத்திய விதம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் 1,100 இந்தியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், தற்போது நடத்தப்பட்டதை போல் யாரும் நடத்தப்படவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

visu
பிப் 06, 2025 19:45

அப்படி ஒரு சட்டம் இயற்றினால் அது எப்படி. பிற நாடுகளை கட்டுப்படுத்தும் . அகதிகள் இந்த நாடு பிடிக்கவில்லை குறை என்றுதானே வேறு நாட்டுக்கு செல்கிறார்கள் அவர்களுக்கு நீங்க என்ன பாதுகாப்பு அளிப்பீர்கள்


Karthik
பிப் 06, 2025 19:42

அங்கேயே கைதுசெய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்து கொன்றிருந்தால் யார் என்ன செய்திருக்க முடியும்? இங்கு வந்த பின் மானம் மரியாதை மனிதாபிமானம் என்று விளம்பரம் தேடும் இந்த கூட்டம், இரு நாட்டு சட்டங்களையும் மதிக்காமல் லஞ்சம் கொடுத்து குறுக்குவழியில் சென்று இந்தியாவின் மானத்தை வாங்கிய ஓடுகாலிகள். இவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தர வேண்டுமோ??


அப்பாவி
பிப் 06, 2025 17:08

ஆம்.. ஆளுக்கு அம்பது லட்சம் செலவழிச்சு அகதிகளாகப் போனாங்க பாவம். சிறப்பு பாதுகாப்பு குடுங்க.


nagendhiran
பிப் 06, 2025 16:03

சிவப்பு கம்பள வரவேர்ப்பு தரனுமா என்ன?


சமீபத்திய செய்தி