உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தகர்த்தெறிந்த இந்தியா; பாக்., ட்ரோன்கள், ஏவுகணைகள் சிதறியது; புகைப்படம் ஆல்பம்!

தகர்த்தெறிந்த இந்தியா; பாக்., ட்ரோன்கள், ஏவுகணைகள் சிதறியது; புகைப்படம் ஆல்பம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியும், பாகிஸ்தான் தரப்பில் துணை பிரதமர் இஷாக் தர்ரும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.முன்னதாக, நேற்று இரவு பாகிஸ்தானில் இருந்து இந்தியா மீது ஏவப்பட்ட ஏவுகணைகள், டிரோன்களை சுட்டு வீழ்த்தி நமது பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். பாக்., ட்ரோன்கள், ஏவுகணை பாகங்கள் சிதறி கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.* ஹிமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தின் சிந்த்பூர்ணி அருகே பாகிஸ்தானின் ஏவுகணைகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.* ​​ராஜஸ்தானின் பார்மரில் பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன்களை சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் உள்ள உதிரி பாகங்கள்.* ராஜஸ்தானின் ஜெய்சால்மரில், சிதறி கிடக்கும் பாக்., ஏவுகணைகள், ட்ரோன்கள் பாகங்களை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் ஆய்வு செய்தார்.* ஹரியானா மாநிலத்தில் உள்ள சிர்சாவில், பாகிஸ்தான் ஏவுகணைகளை பாதுகாப்பு படையினர் துல்லியமாக சுட்டு வீழ்த்தினர். சிதறி கிடக்கும் பாகங்களை மக்கள் பார்த்தனர்.* அமிர்தசரஸில் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்திய பாக்., ட்ரோன்கள், ஏவுகணைகளின் பாகங்கள் சிதறி கிடந்தன.* ஜம்முவில் உள்ள ஷம்பு கோவில் அருகே, சிதறி கிடக்கும் பாக்., ட்ரோன்கள், ஏவுகணைகளின் பாகங்கள்.* பஞ்சாபின் ஜலந்தரில் சிதறி கிடந்த பாக்.,ட்ரோன்களின் பாகங்கள்.* பஞ்சாபின் ஜலந்தரில் சிதறி கிடந்த பாக்.,ட்ரோன்களின் பாகங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.* காஷ்மீரில் சிதறி கிடக்கும் பாக்.,ட்ரோன்களின் பாகங்கள்.* பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்திய பாக்., ட்ரோன், ஏவுகணைகள் பாகங்கள் சிதறி கிடந்ததை போலீசார் பார்வையிட்டனர். இடம்: ஜலந்தர், பஞ்சாப்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Veeraputhiran Balasubramoniam
மே 10, 2025 20:12

நம்ம சிவகாசி தீபாவளி பாம் வங்கி சீனா டப்பவில் பேக் செய்து பாகிஸ்தான் முட்டல் களுக்கு கொடுத்து காசாக்கி விட்டானுக... இது தெரிந்டதும் தான் பாகிஸ்த்தான் நம்ம காலில் விழுந்து அயா மோடிஜி எமாதுட்டோம் இந்த சீன காரன நம்பி, என்று புலம்பி நேர ட்ரும்ப் கிட்ட போய்... ஐயா நீங்க சொன்னாதான் மோடிஜி கேப்பாருண்னு கெஞ்சி கூத்தாடி ... ட்ரும்ப்பும் சரி நான் சொல்றென் மோடிஜி கேட்பார் ... அவன் என் நண்பேண்டா.... என்று மொடிஜி இடம் பேசி போரை நிறுத்தி உள்ளார் மோடிஜி... அது 12ஆம் தெதி வரை..???? இனி மேல் புதிய சாக்ப்தம் பழைய ஒப்பந்தங்க்கள் செல்லாது புது ஒப்பந்தத்துக்கு ஒத்து கொள்வதானால்... நாங்க ஒப்பந்த போடுவோம் நீங்க கையெழுத்து மட்டும் போடுங்க என கூறி இருப்பார் பார்கலாம் என்ன நடக்கிறது என்று...12ஆம் தேதி இரவு....


Mecca Shivan
மே 10, 2025 19:11

இந்த போர் நிறுத்தத்தை கொண்டுவர ஆவான செய்த திராவிட அடிமை திருமாவிற்கும் கேரளா மைந்தன் செபாஸ்டியனுக்கும் நன்றி


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 10, 2025 15:19

அணுகுண்டு வீசுவோம்னு மெரட்டினாங்க.


Kasimani Baskaran
மே 10, 2025 15:43

சீனா விற்றது கடலை மிட்டாய்... அதைத்தான் அவர்கள் அணுகுண்டு என்று சொன்னார்கள்.


முக்கிய வீடியோ