உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவை நம்பி இந்தியா இல்லை; வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் சசி தரூர் கருத்து!

அமெரிக்காவை நம்பி இந்தியா இல்லை; வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் சசி தரூர் கருத்து!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வர்த்தகம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில், அதில் இருந்து நாம் விலகலாம். இந்தியாவுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன, என்று காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கூறியுள்ளார். ரஷ்யா மற்றும் சீனாவுடன் வர்த்தகம் செய்து வரும் இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்தார். இது இந்திய தொழில் நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்தியா மீதான அமெரிக்கா விதித்த வரி விதிப்பு குறித்து கவனத்தில் எடுத்துள்ளதாகவும், இந்த வரிவிதிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.இந்த நிலையில், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார்.பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; இது மிகவும் சவால்மிக்க பேச்சுவார்த்தை. நாம் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பிரிட்டனுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அமெரிக்கா மட்டுமே நமது ஒரே வர்த்தக பங்குதாரர் அல்ல. அமெரிக்கா முற்றிலும் நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தால், நாம் மற்ற சந்தைகளுக்கு திரும்ப வேண்டியிருக்கும். இந்தியாவின் வலிமை என்னவென்றால், நாம் சீனாவைப் போல ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் அல்ல. நமக்கு வலுவான உள்நாட்டு சந்தை உள்ளது. நமது பேச்சுவார்த்தைக்குழுவிற்கு வலுவான ஆதரவு தேவை. நல்ல ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை எனில், நாம் விலகுவது சிறந்தது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

spr
ஜூலை 31, 2025 23:40

"இந்தியாவின் வலிமை என்னவென்றால், நாம் சீனாவைப் போல ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் அல்ல. நமக்கு வலுவான உள்நாட்டு சந்தை உள்ளது. " இத்தகு புரிதல் நம் நாட்டின் பிரபலப் பொருளாதார புலிகளுக்கே இல்லை எனும் போது அரசியல் தற்குறியும் மோடியை எந்தவகையிலாவது மட்டம் தட்ட வேண்டுமென்று எண்ணும் ராகுலுக்கு இருக்குமென்று எதிர்பார்ப்பது மாபெரும் தவறு. "நமது பேச்சுவார்த்தைக்குழுவிற்கு வலுவான ஆதரவு தேவை. நல்ல ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை எனில், நாம் விலகுவது சிறந்தது" இது சிறப்பான கருத்தே என்பதால் மோடி அரசு இதற்கென ஒரு குழுவை அமைத்து மேம்படுத்த முயற்சி எடுக்கலாம் திரு தரூர் சரியான புரிதல் உள்ள மனிதர். பன்னாட்டு உறவுகள் குறித்த அறிவுடைய திரு ரகுராம் ராஜனைக் கூட மன்னித்து இக்குழுவில் சேர்க்கலாம்


தாமரை மலர்கிறது
ஜூலை 31, 2025 20:53

இந்தியா தனது பொருளாதார வலிமையை உலகிற்கு காட்டவேண்டிய தருணம் ட்ரம்ப் ஆல் கிடைத்துள்ளது. அமெரிக்காவை நம்பி இந்தியா இல்லை. பத்து சதவீத வளர்ச்சியில் இந்தியாவின் பொருளாதாரம் சக்கை போடு போடுகிறது. அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள், வெல்டர், பிளம்பர், எலெக்ட்ரிசின் லட்சக்கணக்கில் சம்பளம்.அரசு ஊழியர்களின் வருடாந்தர கிம்பளம் சில கோடியை தாண்டிவிட்டது.


MARUTHU PANDIAR
ஜூலை 31, 2025 20:38

உள்ளூர் மக்களின் வாங்கும் திறனே நல்ல நிலையில் இருப்பதால் இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்பட தேவை இல்லை


Rajarajan
ஜூலை 31, 2025 18:52

ட்ரம்புக்கு நம்ம ஊரு வேப்பிலையும், விபூதியும் அடிச்சா தான் சரிப்பட்டு வரும் போல.


Ganesh
ஜூலை 31, 2025 17:52

Requirements leads Innovation... Need not to worry about this US blackmails... Below two things happen sure shortly if i am correct 1 China and Japan will reduce the holdings of America bonds and Dollars instead they will increase the Gold stock 2 BRICS will either introduce new currency or trade with gold between these countries instead of USD and subsequently some of the other countries who are affected / Suffered by US will also join and strengthen the BRICS 3 Sudden of the value of USD makes the evacuation of international skill manpower from US 4 Finally Honeymoon of US will end slowly Nb :- Now only the problem who will tie the bell on the cat neck.... At present condition China will do by taking the revenge... So we have to cautiously monitor the movements of China and we have to make financial movements suitably


Sivagiri
ஜூலை 31, 2025 17:50

கரெக்டு . . நாம என்ன - இந்தியன் கேர் ஆ.:.ப் அமேரிக்கா-ன்னா வாழறோம் ? . . . உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவை பற்றியோ ரஷ்யாவை பற்றியோ இங்கிலாந்தை பற்றியோ எந்த சிந்தனையும் இல்லாமல் இருக்கின்றன . . . எத்தனையோ நாடுகள் அமெரிக்கான்னா என்னான்னே தெரியாமல் கூட இருக்கின்றன . . . அமெரிக்காவை பற்றி ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே உஷாராக இருக்க வேண்டி உள்ளது . - என்னெவென்றால் அவன் பாகிஸ்தானில் ஆயுதங்களை , படையை இறக்கி விட கூடாது . . . அது நடக்க கூடாது என்றால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எவ்வளவு சீக்கிரம் மீட்கிறோமோ அவ்வளவு நல்லது . . .


J. Vensuslaus
ஜூலை 31, 2025 16:43

யாரை நம்பியும் யாருமில்லை. சொந்த காலில்தான் நிற்க வேண்டும். முடியேல், நின்று பழக வேண்டும்.


V Gopalan
ஜூலை 31, 2025 16:37

Prime Minister Shri Modi had committed a mistake of inviting Trump and XI Zinping both have stabbed back. US is still under slavery, whatever they dictate we must listen but those days are gone. Now, India is fourth Economically developed country and cannot dictate. Besides US always play a foul, just because US could not get an island for US defence establishment in Bangladesh during the regime of Sheik Hasina, Joe biden ensured her ouster and Yunus made to take ge and now Trump. So, US feels still as a big brother attitude and now almost every tiny country have developed economically and not depended on any one only mutual interest should be the objective. Singapore is a small area population of 75,000 but the development and how nicely planned city with safety and security of citizens, cashless travel all with one digital card for travelling in buses, MRT & LRT. Almost all the needs are met for the citizens, though 75% are Chinese yet they live with respect each other National. The trees with gardening all around the city with conducive temperature really how the Singapore Govt do all with available resources. Even the immigration so automatic four terminals for a tiny country and felt when our country has natural resources, man power, technology et all why our country is lagging behind with such facilities only the reason to know that heavy corruption, freedom of speech/writing countless number of party/ties not allowing any development et all made country like garbage. In Singapore no illegal immigrants even US has sent back with shackles and chains. So, our country will be continued to be for generation.


ராமச்சந்திரன்
ஜூலை 31, 2025 16:01

சபாஷ் சசி தரூர். பொறுப்பான தலைவர். இந்த முதிர்ச்சி ராகுலிடம் இல்லையே!


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 31, 2025 15:54

140 சதவிகித வரி விதிக்கப்பட்ட சீனாவே அதை பற்றி கவலைப்படாமல் உள்ளது. சமீபத்தில் ஒரு கார் நிறுவனத்தின் புதிய மாடல் கார்களுக்கு மிக அதிக முன் பதிவு நடந்துள்ளது. அந்த கார் சீனாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார். ஆகவே இதற்காக நாம் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. ஆரம்பத்தில் இந்த அதிகப்படியான 25 சதவிகித வரிக்கு இந்திய அரசு அதை ஈடு செய்யும் விதமாக ஏற்றுமதி வரிச் சலுகை ஊக்கத் தொகை இது போன்று சில சலுகைகள் கொடுத்தாலே போதுமானது. ஆனால் ஒன்று இந்த டிரம்ப் நோபல் பரிசு வாங்குவதற்குள் ஆசிய நாடுகளின் எதிர்ப்பை வாங்கி கட்டிக் கொண்டு தான் போவார் என்பது நிச்சயம்.


முக்கிய வீடியோ