உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.நா., பொருளாதார கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு

ஐ.நா., பொருளாதார கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு

புதுடில்லி: ஐ.நா., பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது. சர்வதேச பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் தொடர்பான கொள்கைகளை பரிந்துரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அமைப்பாக ஐ.நா., பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், 2026-28ம் ஆண்டுக்கான ஐ.நா., பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு பதவி காலம் இருக்கும். கடைசியாக 2008 முதல் 2020 வரை 4 முறை இந்த கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றது. தற்போது 18வது முறையாக இந்த கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது. தங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வளர்ச்சி பணிகளை முன்னெடுப்பதுடன், ஐ.நா., பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலை பலப்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் என்று அவர் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KavikumarRam
ஜூன் 05, 2025 16:24

பாரதம் ஐநா எனும் மொக்கை அமைப்பில் இருந்து வெளியேற வேண்டும். பாரதத்துக்கு பாதகமாகவே ஐநா, உலக வங்கி போன்ற அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இது அமெரிக்கா மற்றும் சீனாவின் கைக்கூலி அமைப்புகள். இந்த இரு நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை கடுகளவும் விரும்பாதவர்கள். பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மாலத்தீவு போன்ற சில்லறை நாடுகளுக்கு பின்வழியாக சாவிகொடுத்து முடுக்கிக்கொண்டு இருப்பவர்கள். அதனால் நாம் இந்த வெளங்காமப்போன அமைப்பிலிருந்து வெளியேறி பொதுவாக தனித்து இயங்குவதே நமக்கு நல்லது. இவனுங்க யாரும் இந்தியாவுக்கு உளமார ஆதரவு கொடுக்கப்போறது இல்லை.


Barakat Ali
ஜூன் 05, 2025 15:15

தேர்தல் கால சீட்டு பேரத்தில் இடம் கொடுப்பது போலவா ????


Anand
ஜூன் 05, 2025 11:41

இன்னுமா ஐநா வை உலகம் நம்புது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை