உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ராக்கெட் ஏவுதல் செலவு இந்தியாவில் தான் அதிகம்: கேம்பிரிட்ஜ் ஆய்வில் தகவல்

 ராக்கெட் ஏவுதல் செலவு இந்தியாவில் தான் அதிகம்: கேம்பிரிட்ஜ் ஆய்வில் தகவல்

புதுடில்லி: நம் நாட்டின் ராக்கெட் ஏவுதல் செலவு, விண்வெளி துறையில் முன்னணியில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஒரு கிலோ எடைக்கு, 12 லட்சம் ரூபாய் என, மிக அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், குறைந்த செல வில் விண்வெளி சாதனை களை நிகழ்த்தும் நிறுவனமாக, பல ஆண்டுகளாக உலக அளவில் குறிப்பிடப் பட்டு வருகிறது.

பகுப்பாய்வு

இந்நிலையில், ராக்கெட் ஏவுதல் செலவை ஒரு கிலோ எடைக்கு என கணக் கிடும் போது, நம் நாடு அதிக செலவு செய்யும் நாடாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கேம் பி ரிட்ஜ் பல்கலை பொருளா தார நிபுணர் அலெசியோ டெர்சி, இத்தாலியின் டூரின் பாலிடெக்னிக் பல்கலையைச் சேர்ந்த பிரான்செஸ்கோ நிக்கோலி ஆகியோர் இணைந்து, ராக்கெட் ஏவுதலுக்கான செலவு மற்றும் ஒரு கிலோ எடையை தாழ் புவி வட்டப்பாதைக்கு செலுத் தும் செலவு குறித்து ஆய்வு செய்தனர். இதற்காக, 1960 - 2025 காலகட்டத்தில் பல நாடுகளின், 6,740க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுதல்களின் தகவல்களை பகுப்பாய்வு செய்தனர். அவர்கள் வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையின் விபரம்: கடந்த 2025ல், ஒரு கிலோ எடையை தாழ் புவி வட்டப்பாதைக்கு செலுத்துவதற்கான உலக சராசரி செலவு, 3.71 லட்சம் ரூபாய். அமெரிக்காவில், 3.10 லட்சம் ரூபாய்; ஜப்பானில், 5.08 லட்சம் ரூபாய்; சீனாவில், 5.58 லட்சம் ரூபாய்; ரஷ்யாவில், 6.41 லட்சம் ரூபாய்; ஐரோப்பாவில், 9.50 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. இந்தியாவில், இந்த செலவு, 12.77 லட்சம் ரூபாயாக இருந்தது. விண்வெளி துறையில் முன்னணியில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் ஒரு கிலோ எடையை சுற்றுப்பாதைக்கு செலுத்துவதற்கான செலவு அதிகமாக உள்ளது. அமெரிக்காவுடன் ஒப் பிடுகையில், இந்தியா வின் செலவு நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியாவின் இந்த செலவு, அந்நாட்டின் சிக்கனமான விண்வெளி திட்டம் என்ற பொதுவான கருத்துக்கு மாறுபட்டதாக இருக்கலாம்.

முக்கிய காரணி

இந்தியாவின் ராக்கெட்டுகள் பொதுவாக குறைந்த அளவிலான சரக்குகளையே சுமக்கின்றன. இதனால், ராக்கெட் ஏவுதலுக்கான நிலையான செலவுகள் சரக்குகளின் மீது பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இதனால், ஒரு கிலோவுக்கான செலவு அதிகமாகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கா வில் ஏவுதல் செலவு ஒரு கிலோவுக்கு குறைவாக இருப்பதற்கு, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக் கெட்டுகளும், நிலையான உட்கட்டமைப்பு செலவுகளை அதிக ஏவுதல்களுக்கு பயன்படுத்துவதும் முக்கிய காரணிகளாக உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் இல்லை!

இந்த ஆய்வறிக்கை குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் கூறியதாவது: ஒரு கிலோவுக்கான செலவை மட்டும் வைத்து ராக்கெட் ஏவுதலின் முழுமையான செலவை மதிப்பிட முடியாது. 4.5 டன் எடையுள்ள செயற்கைக்கோளை ஏவுவதற்காக, நம் நாடு அமெரிக்க நிறுவனத்துக்கு செலுத்திய தொகையும், நம் நாட்டின் எல்.வி.எம்.-, -- 3 ராக்கெட் மூலம் அதே செயற்கைக்கோளை ஏவுவதற்கான செலவும் ஒரே அளவில் உள்ளது. இந்திய ராக்கெட்டுகள் குறைவான செலவில் ஏவப்படுகின்றன என, கூற முடியாது. அதே நேரத்தில், அவை அளவுக்கு அதிகமான செலவு கொண்டவையும் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Balan Palaniappan
ஆக 25, 2026 10:01

வேலைக்காரனுக்கு நாம் செய்வதெல்லாம் மட்டம் தான் ஆனால் இந்தியாவில் தயாராகும் ஆப்பிள் ஐபோனை ஏன் வாங்குகிறார்


subramanian
ஆக 24, 2026 19:47

சீனாவில் தான் குறைவு. அமெரிக்கா வில் செலவே இல்லை இலவசமாக ஜீரோ செலவில் செய்கிறார்கள். கேழ்வரகில் நெய் ஒழுகும் கேட்குறவன் கேனையன் என்றால்.


Anand
ஆக 24, 2026 12:27

இந்த செய்தி நம் நாட்டை மட்டம் தட்டுவதற்கும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டுக்களவாணிகளுக்கு மேலும் உரம்போடும் நச்சு வேலையாகவே தெரிகிறது.


S. Venugopal
ஆக 24, 2026 10:02

விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு நமது ஜி. எஃப். ஆர். படி சிஏஜி தணிக்கையாளர்களின் தணிக்கை குறிப்புக்களுக்கு பயந்து ஜிஎம் இணையதளம் மூலம் லோயஸ்ட் கோட்டேஷன் களில் வாங்கப்படும் பொருட்களை ஆராய்ச்சிகளுக்கு உகந்த தரத்திற்க்கு கொண்டுவருவதற்கு ஆகும் நேர விரயம் மற்றும் இன்-டைரக்ட் காஸ்ட் களை அந்த லோயஸ்ட் கோட்டேஷன் விலைகளுடன் கூட்டினால் மொத்த செலவு லோயஸ்ட் கோட்டேஷன் விலையினை விட மிக மிக அதிகம். ஆகவே விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளுக்கு பொருட்களை கொள்முதல் செய்ய அரசு ஒரு புதிய கொள்கையினை வகுத்தால் நன்மை பயக்கும்.


Patriots to the core.
ஆக 24, 2026 09:40

நமது முன்னேற்றத்தைப் பற்றி எதிர்மறையாகக் கருத்து தெரிவிப்பதற்கு முன், தயவுசெய்து இதைப் படியுங்கள். நமது நாடு இதுவரை 36 வெவ்வேறு நாடுகளிலிருந்து 434 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இவற்றில், அமெரிக்காவின் சுமார் 236 செயற்கைக்கோள்களையும், ஐக்கிய இராச்சியம் மற்றும் சிங்கப்பூரின் சுமார் 80 செயற்கைக்கோள்களையும் நாம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளோம். சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள், விண்வெளித் தொழில்நுட்பத்தில் நாம் படுவேகமாக முன்னேறி வருகிறோம் என்பதை நிரூபிக்க இது போதாதா? நமது முன்னேற்றத்தைக் குறித்து நாம் பெருமை கொள்வோம். நாம் யார் என்பதை நிரூபிக்க, எந்தப் பிரயோஜனமும் இல்லாத சில மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களிடமிருந்து வரும் குப்பையான சான்றிதழ்கள் நமக்குத் தேவையில்லை. வந்தேமாதரம்


Keshavan.J
ஆக 24, 2026 08:07

இந்த அறிக்கை மேற்கத்திய நாடுகளுக்குச் சாதகமாகவும், இந்தியர்களைத் தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. கருத்துப் பகுதியில் உள்ள திராவிடர்கள் எந்தவித ஆய்வும் செய்யாமல் இந்த அறிக்கையை நம்புகிறார்கள். காங்கிரஸ், திமுக மற்றும் பிற இந்திய வெறுப்பாளர்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அவர்களின் நோக்கம் வெற்றி பெற்றது. செலவு அதிகமாக இருந்தாலும், செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்துவதற்காக மற்ற நாடுகள் இந்தியாவையே விரும்புகின்றன. இந்தியாவின் வர்த்தக விண்வெளிப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் NSIL, கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய வருவாய் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வர்த்தக செயற்கைக்கோள் ஏவுதல்கள் மற்றும் அது தொடர்பான சேவைகள் மூலம், செயல்பாட்டு வருவாய் 2021-22 நிதியாண்டில் ₹321.77 கோடியிலிருந்து சுமார் $38 மில்லியன் அமெரிக்க டாலர் 2024-25 நிதியாண்டில் ₹3,026 கோடிக்கும் சுமார் $360 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகமாக உயர்ந்துள்ளது.


Nandakumar Naidu
ஆக 24, 2026 07:49

இது பொய் செய்தி, இந்தியாவின் விரோதி நாடுகளும், இந்தியாவில் உள்ள தேச விரோதிகளின் சதி திட்டம்.


G R Rajan
ஆக 24, 2026 07:41

This information is absolutely incorrect. The actual launch cost from India is much lower. The costs mentioned in this article seem to include inflated ges added by their consultants, such as: 1. Pre-checklist and senior project director verification consultancy ges 2. Pre-launch verification consultancy ges 3. Project handling and management consultant ges 4. Insurance and re-insurance ges 5. Their commutation and accommodation ges These ges are added by their marketing team to increase the project launch cost and get more commission. These are NOT included in our actual launch cost in India.


பாமரன்
ஆக 24, 2026 07:34

இது போன்ற பொறுப்பை சுமக்காத ஆய்வு கட்டுரைகள் ஒலக யூனிவர்சிடிகளில் படிக்கும் ஸ்டூண்ட்ஸ் மூலம் ஆயிரக்கணக்கில் வருது. ... அட என் பசங்களே விட்ருக்காய்ங்க... இந்தியாவில் தான் குறைவு. இவை ச்ச்ச்சும்மா. உதாரணமாக சென்னைல இருந்து ரெண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெல்லிக்கு லாஸ்ட் மினிட்ல புக் பண்ணினாலும் ஃப்ளைட் இருபதாயிரம் ரூபாய் தான் வரும்... அதாவது கிலோமீட்டர் ரெண்டு ரூபா.


Ravichandran M.
ஆக 24, 2026 06:54

This information is actually contradicting our PM message to the world that our launch costs in KM is less than auto fare. I think these are fabricated information to give to the profit making technology to big private giants as it happened in many PSU.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ