இந்தியா வளமான மொழிகளின் நிலம்: துணை ஜனாதிபதி பெருமிதம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: ' இந்தியா வளமான மொழிகளின் நிலம்,' என்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கூறினார்.ஐதராபாத்திற்கு வந்த துணை ஜனாதிபதி, ஜகதீப் தன்கர் ஐ.ஐ.டி.,யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பேசினார்.ஜகதீப் தன்கர் பேசியதாவது:இந்தியா வளமான மொழிகளின் நிலம். பார்லிமென்டில் கூட, 22 மொழிகளில் ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பு நடைபெறுகிறது. ஒவ்வொரு இந்திய மொழியையும் வளர்ப்பதை ஆதரிக்க வேண்டும்.மொழிகள் மக்களை அவர்களின் வேரூன்றிய பாரம்பரியத்துடன் இணைப்பதுடன், பன்முகத்தன்மையில் ஒற்றுமையை வளர்க்கும் முக்கிய பங்கை வகிக்கின்றன.கல்வியில் தாய்மொழிகளை ஊக்குவிப்பது மற்றும் உலக தாய்மொழி தினம் போன்ற நிகழ்வுகள் மூலம் மொழிக் கலாசார பன்முகத்தன்மையை அரசு கொண்டாடுகிறது.ஒவ்வொரு இந்திய மொழியையும் வளர்ப்பதன் மூலம், இந்தியா தனது கலாசாரத்தை வலுப்படுத்தி, எதிர்கால தலைமுறைகள் தங்கள் பண்பாட்டுப் பாரம்பரியத்துடன் இணைந்திருக்க வழிவகை செய்கிறது.இவ்வாறு ஜெகதீப் தன்கர் பேசினார்.