உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி துபாயில் விளையாட தயாராக உள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பி.சி.சி.ஐ., கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. ஒருநாள் தரவரிசையில் 'டாப்-8' இடத்திலுள்ள அணிகள் மட்டும் பங்கேற்கும். இதில் 2002, 2013ல் சாம்பியன் ஆன இந்தியா, 2017ல் பைனலில் பாகிஸ்தானிடம் தோற்றது. தற்போது 8 ஆண்டுக்குப் பின் பாகிஸ்தானில் இத்தொடர் அடுத்த ஆண்டு பிப். 19-மார்ச் 9ல் நடக்க உள்ளது. ஆனால் 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் சென்றதில்லை. 2012-13ல் மட்டும் பாகிஸ்தான் இந்தியா வந்து, 'டி-20', ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதன் பின் ஐ.சி.சி., தொடரில் மட்டும் இரு அணிகள் மோதுகின்றன. கடந்த 2023 ஆசிய கோப்பை தொடருக்காக இந்தியா, பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இந்தியா பங்கேற்ற போட்டிகள் இலங்கையில் நடந்தன. சாம்பியன்ஸ் டிராபில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளுக்கான உத்தேச அட்டவணை வெளியானது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா மோதும் போட்டிகள் லாகூரில் மட்டும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mg9sf2yz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனிடையே, சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இதனால், இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என எதிர்பார்ப்பு எழுந்தது.இந்நிலையில் பி.சி.சி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து விட்டோம். இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை துபாயில் நடத்தலாம் எனக்கூறியுள்ளோம். இது தான் எங்களது நிலைப்பாடு. இதனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anonymous
நவ 09, 2024 10:36

சரியான முடிவு


அப்பாவி
நவ 08, 2024 22:18

ஜெய்சங்கரே போனபோது இவிங்களுக்கு என்ன தயக்கம்? ஆடுறது காசுக்கு. போய் அடிச்சி தூக்கி போட்டுட்டு வாங்க.


Ramesh Sargam
நவ 08, 2024 22:02

துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதுபோல, பாகிஸ்தான் பெயரை கேட்டாலே, தூர விலக வேண்டும். துஷ்டனைவிட கொடூரமானவர்கள் இந்த பாகிஸ்தானியர்கள்.


முருகன்
நவ 08, 2024 19:21

மற்ற விளையாட்டு வீரர்கள் மட்டும் சொல்வது எப்படி


J.V. Iyer
நவ 08, 2024 17:51

கிரிக்கெட் வீரர்களுக்கும் நாடுதான் முக்கியம். பயங்கரவாத போர்க்கிஸ்தானுக்கு சென்று அவர்கள் செய்த அட்டூழியங்களை நியாயப்படுத்துவது சரி அல்ல.


முக்கிய வீடியோ