உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ச்சியை நோக்கி இந்தியா: ஆர்.எஸ்.எஸ்., பெருமிதம்

வளர்ச்சியை நோக்கி இந்தியா: ஆர்.எஸ்.எஸ்., பெருமிதம்

இந்துார்: இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறி வருகிறது என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநில அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் எழுதிய 'பரிக்ரமா கிருபா சார்' என்ற புத்தக வெளியீட்டு விழா இந்துாரில் நடந்தது. நர்மதை நதி குறித்து பேசும் இந்த புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அனைவரது கணிப்புகளையும் பொய்யாகும் வகையில், நம் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. சிலரின் சுயநலம் தான் உலகில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். ஞானம், செயல் மற்றும் பக்தி அடங்கிய பாரம்பரிய தத்துவங்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பதால் தான், நம் நாடு தொடர்ந்து முன்னேறி வருகிறது. சுதந்திரம் பெற்றதும், இந்தியா பல துண்டுகளாக சிதறி விடும் என பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கணித்திருந்தார். ஆனால், அவரது கணிப்புகள் எல்லாம் இன்று பொய்யாகிவிட்டன. சர்ச்சிலின் கணிப்பு தற்போது பிரிட்டனுக்கு தான் பொருத்தமாக இருப்பது போல் தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

திகழ்ஓவியன்
செப் 15, 2025 12:15

நீங்கள் இதில் எல்லாம் தலை இடாமல் இருந்தாலே போதும் , நாடு வளர்ச்சி தானே அடையும்


Mettai* Tamil
செப் 15, 2025 14:23

2014 க்கு பிறகு தான் RSS மற்றும் பிஜேபி யின் தலைமையில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது ...


Rathna
செப் 15, 2025 11:51

தேச பக்தி அமைப்புகள் இல்லாவிட்டால், மதம் கொண்ட ஜிஹாதி அமைப்புகள், 10 சதவீத விளம்பர மத அமைப்புகள் ஏகாதிபத்திய அமைப்புகளுடன் சேர்ந்து நாட்டை ஆக்ரமித்து விடும். ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை போல பிச்சை எடுக்கும் நிலையில் இல்லாமல் இந்தியா, சுதந்திர மற்றும் வளர்ச்சி அடைந்த நாடாக இருப்பதற்கு காரணம் தேச பக்தி அமைப்புகளே. எந்த பகுத்தறிவு அரசியல் அமைப்புகளும், ஆக்கிரமிக்கும் மதம் கொண்ட அமைப்புகளை கேள்வி கேட்காமல் இருப்பதற்கு காரணம் ஹவாலா பணமும், வோட்டு வங்கியும் தான்.


Indian
செப் 15, 2025 11:44

இப்படி சொல்லியே உங்களை நீங்க ஏமாத்திக்கோங்க


Narayanan Muthu
செப் 15, 2025 11:25

இது பெருமிதம் அல்ல. இந்தியாவை சுரண்டும் அவலம்


Mettai* Tamil
செப் 15, 2025 14:28

இந்தியாவை சுரண்டும் காங்கிரஸ் மற்றும் திமுக வை வீழ்த்துவதில் பெருமிதம் கொள்வோம் ...


Tamilan
செப் 15, 2025 11:21

கொலை கொள்ளைகளில்


Oviya Vijay
செப் 15, 2025 10:06

ஆர்எஸ்எஸ் யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் ஒதுங்கிக் கொண்டாலே போதும். இந்தியா அமைதியுடன் ஜெட் வேகத்தில் வளர்ச்சி பெறும். இந்திய வளர்ச்சியில் மிகப்பெரிய முட்டுக்கட்டை என்பதே மதசார்பின்மையின்றி மதச் சண்டைகள் தொடர்ச்சியாக நம் நாட்டில் நடந்து கொண்டேயிருப்பதால் தான். எவ்வளவுக்கெவ்வளவு இந்தியாவில் அமைதி ஏற்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு இந்தியா வளர்ச்சி பெறும். உலக அரங்கில் மதிப்பு மிக்கதாக உயர்ந்து நிற்கும்...


Mettai* Tamil
செப் 15, 2025 10:49

போலி மதசார்பின்மை ஒதுங்கிக் கொண்டாலே போதும். இந்தியா அமைதியுடன் ஜெட் வேகத்தில் வளர்ச்சி பெறும்....இந்தியா, உலக அரங்கில் மதிப்பு மிக்கதாக உயர்ந்து நிற்க ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி யின் பங்களிப்பு தேவை என்பது காலத்தின் கட்டாயம் ....


Amsi Ramesh
செப் 15, 2025 10:54

காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா பெருமையிழந்து நலிந்து அஞ்சி நடுங்கி இருந்தது இப்பொழுது பாஜக ஆட்சியில் உலகரங்கில் வீறுகொண்டு எழுந்து வல்லரசுகளையே முறுக்கிக்கொண்டு நிற்பது உங்கள் கண்ணனுக்கு தெரியவில்லையோ


M.Sam
செப் 15, 2025 09:36

உங்க வளர்ச்சியை நோக்கி தானே அப்பா சந்தோச,


Indian
செப் 15, 2025 09:35

ஆர் ஸ் ஸ் வளருகிறது. இந்தியா தேய்கிறது.


raj
செப் 15, 2025 12:15

nee oru ...


பாலாஜி
செப் 15, 2025 08:57

பாஜக வளருகிறது. இந்தியா தேய்கிறது.


Mettai* Tamil
செப் 15, 2025 10:42

பாஜக வின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி......


Narayanan Muthu
செப் 15, 2025 11:23

பாஜகவின் வளர்ச்சியே இந்தியாவின் வீழ்ச்சி.


pakalavan
செப் 15, 2025 08:18

ஏன் டெய்லியும் போடரீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை