உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் நிறுத்தம்: இந்தியா - பாகிஸ்தான் அறிவிப்பு: மே 12ல் ராணுவ அதிகாரிகள் பேச்சு

போர் நிறுத்தம்: இந்தியா - பாகிஸ்தான் அறிவிப்பு: மே 12ல் ராணுவ அதிகாரிகள் பேச்சு

புதுடில்லி : இன்று 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டு உள்ளன. வரும் 12ம் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக டிரம்ப் அறிவித்து இருந்தார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை கடந்த 7ம் தேதி அதிகாலை நம் படைகள் தரைமட்டமாக்கின. இதில் ஆத்திரமடைந்த பாக்., ராணுவம், அன்று இரவே ஜம்மு - காஷ்மீர் எல்லையோர கிராமங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் வாயிலாக தாக்கியது; இதில், 16 பேர் உயிரிழந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lov9jhie&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

குண்டு மழை

இதற்கு மறுநாள் காலையே பதிலடி தரப்பட்டது. லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுக்குள் புகுந்த நம் ட்ரோன்கள் குண்டு மழை பொழிந்ததில், பாக்., ராணுவம் நிலைகுலைந்தது. சில மணி நேரம் அமைதிகாத்த நிலையில், 8ம் தேதி இரவில் பாக்., மீண்டும் தாக்குதலை தொடர்ந்தது. இந்த முறை, ஜம்மு- - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தானில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் செலுத்தியது. இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பு, எதிரி ட்ரோன்களை நடுவானில் மறித்து அழித்தது.நேற்றும் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு -- காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியது. அவை அனைத்தையும் நடுவானில் மறித்து நம் ராணுவம் சுக்குநுாறாக்கியது. இன்று, பாகிஸ்தான் அத்துமீறலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் அந்நாட்டின் முக்கியமான 3 விமானபடை தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசி தாக்குதல் அளித்து அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனை பாகிஸ்தான் துணை பிரதமர் உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) நமது நாட்டு டிஜிஎம்ஓ., வை இன்று மாலை 3: 35 மணிக்கு அழைத்து பேசினார். அப்போது, இன்று மாலை 5:00 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், துப்பாக்கிச்சூட்டையும் நிறுத்தி கொள்வது என இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இது குறித்து இரு தரப்பும் உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இருநாட்டு டிஜிஎம்ஓ.,க்களும் வரும் 12ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பேசுவார்கள்.என்றார். இதன் மூலம் போர் நிறுத்தம் அமலாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Gnanam D
மே 11, 2025 08:44

Action taken against the pok is prove that PM Modiji and their admin people are handle the situations very wisely prior and after the war. Its prove that you r given confident to all the citizen of India and prove that we can fight back whoever strike indian people/land. Moreover all the parties in India at one line for this situation, thanks for Ragulji and his team as well.


seenivasan
மே 10, 2025 19:34

நமது Pok வை கைப்பற்றி விட்டு. போர் நிறுத்தம் செய்ய வேண்டும். இந்த முறை கிடைத்த பொன்னான வாய்ப்பை தவற விடவே கூடாது.


visu
மே 10, 2025 19:49

அங்க இருப்பதில் யார் தீவிரவாதி என்று கண்டுபிடிப்பீங்க இப்ப இருக்கும் நிலையில் அது தேவையில்லாத தலைவலி இந்தியா காஷ்மீரில் முதலில் தீவிரவாதத்தை ஒழித்து வீட்டு அங்க கையை வைக்கலாம் இல்லை POK இல் தீவிரவாததை ஒழித்து விட்டு இங்க இணைக்கலாம்


Senthil Kumar
மே 10, 2025 20:57

Yes. Modi is doing the same mistake what Indira did. Till we regain POK pak will send terrorists in the name of freedom fighters.


Kasimani Baskaran
மே 10, 2025 14:08

பாகிஸ்தானிடம் அகிம்சயில் தோற்ற பகுதிகளை கைப்பாற்றி அங்கு இந்திய இராணுவத்துக்கோ அல்லது சிறுபான்மையினர் அல்லாதோருக்கோ கொடுக்கலாம். எந்த மாநிலத்திலும் சிறுப்பின்மையினர் பெரும்பான்மையினர்களாக ஆகுமளவுக்கு விடக்கூடாது - ஏனென்றால் மதமா நாடா என்று வந்தால் ஒரு சிலர் மதத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பது பரிதாபம்.


துர்வேஷ் சகாதேவன்
மே 10, 2025 19:05

அப்படியே சீனா ஆக்கிரமித்து உள்ள பகுதி மீட்க சொல்லுங்களேன் , ஏன் இந்த வீரம் சீனாவிடம் காணோம்


s.sivarajan
மே 10, 2025 13:38

பல வளர்ந்த நாடுகள் ஆயுதம் தயாரித்து விற்பனை செய்வதை முக்கிய தொழிலாக கொண்டுள்ளதால் பயங்கரவாதத்தையும் போரையும் தவிர்க்க முடியாது


R.PERUMALRAJA
மே 10, 2025 12:58

நம் நாட்டு பாதுகாப்பு துறை ஒவ்வொரு நாளும் காலையில் பத்திரிக்கைகளுக்கு விளக்கம் கொடுக்கும் பொழுது , " civilian aircraft யை மனித கேடயமாக பாகிஸ்தான் ராணுவமும் அதன் ISI யும் பயன்படுத்துகிறார்கள், பாகிஸ்தான் மக்களும் international community யும் தங்களின் பயணத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் " என்று வேண்டுகோள்விடுத்து பின் இந்தியா ICBM பயன்படுத்தலாம் , ஓடி ஒளிந்துகொண்ட ISI யின் இருப்பிடத்தை தெரிவிக்கும்படியும் பாகிஸ்தான் மக்களுக்கு வேண்டுகோள்விடுத்து அதன் மூலம் பாகிஸ்தான் மக்களிடமிருந்து தகவல்களை பெற முயற்சிக்கலாம் . அடுத்த 10 நாட்களில் de - escalation முடிவு எடுக்காமல் இந்தியா முன்னேறுவது , பாகிஸ்தானின் பகுதிகளை கைப்பற்றுவது மட்டுமே எதிர்கால இந்தியர்களுக்கு செய்யப்படும் நன்மை .


நாலு பேருக்கு நன்றி
மே 10, 2025 12:51

இந்தியா இமயமலைக்கு அடுத்துள்ள வடக்கு பாகிஸ்தானை கைப்பற்ற வேண்டும். இதனால் அதிகமான தீவிரவாத ஊடுருவல்கள் இந்தியாவால் தடுக்கப்படும்


Chanakyan
மே 10, 2025 12:44

பாஜக மற்றும் மோடியை எதிர்ப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரமிது. நிர்வாக திறமை மிக்க, மிகச்சிறந்த தேசப்பற்றாளரான, நேர்மையான, துணிச்சலான ஒரு தலைமை நாட்டை ஆளும்போது ராணுவம் போன்ற துறைகளில் மௌனமாக நிகழ்ந்த புரட்சியின் நன்மைகளைத் தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சீருடை அணிந்த தீவிரவாதி என தன் சொந்த நாட்டிலேயே வர்ணிக்கப்படுமளவிற்கு அடிப்படைவாதியான பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனிர், இந்தியாவில் யார் ஆட்சியில் இருந்திருந்தாலும் சண்டைக்கு இழுத்திருப்பார். முந்தைய ஆடசியாளர்கள் இருந்திருந்தால்......? நிலைமையை யோசிக்கவே பயமாக இருக்கிறது.


sridhar
மே 10, 2025 18:58

கஷ்டப்பட்டு யோசிக்க வேண்டாம். கராச்சியில் இருந்து வெறும் பத்து பேர் 2008 ல் ஒரு சிறிய படகில் வந்து மும்பையில் நுழைந்து தாக்குதல் நடத்தி பல நூறு பேரை கொன்றார்கள் . காங்கிரஸ் தலைமையில் ஆன மத்திய அரசு பாகிஸ்தானிடம் , தயவு செய்து இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என்று கெஞ்சியது தவிர வேறு நடவடிக்கை இல்லை. நல்லவேளை , வடக்கன்ஸ் அறிவோடு பிஜேபிக்கு வாக்களித்து இப்போது இந்தியாவை காப்பாற்றி இருக்கிறார்கள் . நாம் ?


துர்வேஷ் சகாதேவன்
மே 10, 2025 19:03

அய்யா சாணக்கிய நீட் க்கு காட்டிய கெடுபுடி , இங்கே அண்ணாமலை க்கு Z பாதுகாப்பு 29 ஜவான் போது காப்பு , விஜய் Y பாதுகாப்பு 16 ஜவான் , இந்த பாதுகாப்பு சுற்றுலா வரும் இடத்தில கொடுத்து இருந்தா இந்த நிலை வந்திருக்காதே , தும்பை விட்டு வாலை பிடித்த கதை , இதற்ற்கு இவ்வளவு செலவு , இதற்கென்று GST வரி போடாமல் இருந்தால் சரி


அசோகா
மே 10, 2025 10:54

பதிலடி எல்லாம் பணம் மற்றும் கால விரயம் பலமான அடி பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளை முடிவுக்கு கொண்டு வரும்


R.PERUMALRAJA
மே 10, 2025 09:50

இந்தியா தாக்கியது நாங்களும் திருப்பி தாக்கினோம் என்று பாகிஸ்தான் பிரச்சாரங்களை எப்போதும் பரப்பி வருகிறது இம்முறையும் பரப்பி வருகிறது , ராணுவ வலிமையையில் ஏதோ இந்தியாவிற்கு நிகரான நாடு போல் வெளிஉலகிற்கு காட்டிகொள்ள நினைக்கும் . பங்களாதேஷ் , நேபால் ஸ்ரீலங்கா போன்ற குட்டி நாடுகள் பாகிஸ்தானை இந்தியாவிற்கு நிகரான நாடு என்று நினைத்து கூட்டு போர் பயிற்சிகளை மேற்கொள்ள நினைக்கும் அல்லது சீனாவின் நிர்பந்தத்தை ஏற்று இந்த குட்டி நாடுகள் இந்தியாவிற்கு எதிராக போர்பயிற்சிக்கு இடமளிக்கும் . சென்ற முறை போல இல்லாமல் இந்தியா பாகிஸ்தானின் ஏதாவது ஒரு பகுதியை பிடிக்கவேண்டும் பிடித்து நமது ராணுவ நிலையை நிலைநிறுத்தவேண்டும் , தொடர்ச்சியாக பாகிஸ்தானை அடித்தால் இன்னும் 4 நாட்களில் பாகிஸ்தான் நிலைகுலைந்து போர் முடிந்துவிடும் , சீனாவின் ஆயுதங்கள் எவ்வாறு வேலை செய்கிறது அதை இந்தியா எவ்வாறு கையாளுகிறது என்று கண்டுபிடிக்கும் வரை " its not our bussiness " என்று கூறிக்கொள்ளும் , கண்டுபிடித்தவுடன் இந்தியா பாகிஸ்தான் இடையே சமரசம் செய்ய வரும் . சமரசம் செய்ய இன்னும் 4-5 நாட்கள் பிடிக்கும் , அதற்குள் இந்தியா பாகிஸ்தானை ஒழித்து பாகிஸ்தானின் POK , அல்லது வேறு எதாவது ஒரு பகுதியை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் , அவ்வாறு செய்வதால் மட்டுமே எதிர்காலத்தில் bahalgam தாக்குதல் போல பல தீவிரவாத தாக்குதல்களை நிறுத்த முடியும் .


தாமரை மலர்கிறது
மே 10, 2025 02:12

செலவு கம்மியான ட்ரான் தாக்குதல் உடனடியாக முடியாது. உக்ரைன் ரஸ்சியா போர் போல பல மாதங்கள் தொடரும். பாகிஸ்தானில் எந்த தொழிற்சாலையும் இல்லை. ஏற்கனவே குண்டு போடப்பட்ட நிலையில் உள்ள அவர்கள் தொடர்ந்து போரை நடத்த முயல்வார்கள். பாகிஸ்தானிற்கு போட்டியாக நாமும் ட்ரான் தாக்குதல் நடத்தாமல், ஏவுகணை தாக்குதல் நடத்துவது சரியான பதிலடியாக இருக்கும். அப்போது தான் போர் விரைவில் முடியும். நமக்கு நிறைய வேலை உள்ளது. மின்சாரத்தை கட் செய்து, ரயில் விமான நிலையங்களை நிறுத்தி பொருளாதாரத்தை தேக்கினால், சீனாவிற்கு தான் குஷி. உடனடி கடுமையான பதிலடி பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படவேண்டும். தானே முன்வந்து போரை நிறுத்துகிறேன் என்று கெஞ்சவிடவேண்டும். வளர்ந்து வரும் இந்தியா பணக்கார நாடு. பொருளாதாரத்தை ரொம்ப நாள் தேக்கி வைக்க முடியாது.


Ganesh
மே 10, 2025 08:34

மிகவும் சுலபமான வழி உள்ளது சார்... போரை பாகிஸ்தான் நிப்பாட்ட.. அங்கே இருக்கும் 5-6 முக்கிய தீவிரவாதிகளை அவர்களே கொலை செய்து விட்டு தீவிரவாதி களை இப்போது தான் கண்டுபிடித்து விட்டு கொன்று விட்டோம் என்று சொல்லி கொஞ்சமாவது அவர்கள் மாணத்தை காப்பாற்றி கொள்ளலாம்.... மீதம் இருக்கும் பொருளாதாரத்தையாவது காப்பாற்றி கொள்ளலாம்


புதிய வீடியோ