உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 24 விமான நிலையங்களை மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவு

24 விமான நிலையங்களை மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல் எதிரொலியாக வட மாநிலங்களில் 24 விமான நிலையங்களை வரும் 15ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட மாநிலங்களில் விமான நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் குறையவில்லை. நேற்று எல்லையோர மாநிலங்களில் டிரோன்களை ஏவி தாக்கிய பாகிஸ்தான், இன்றும் இரண்டாவது நாளாக தாக்கி வருகிறது.இதனையடுத்து சண்டிகர், அமிர்தசரஸ், ஜம்மு உள்ளிட்ட நகரங்களில் விமான நிலையங்களை மே 15ம் தேதி வரை மூட மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.இதன்படி,சண்டிகர்ஸ்ரீநகர்அமிர்தசரஸ்லூதியானாபந்தர்கிஷன்கர்க்பாட்டியாலாஷிம்லாகங்ரா ககாய்பதிண்டாஜெய்சால்மர்ஜோத்பூர்பிகாநீர்ஹல்வாராபதன்கோட்ஜம்முலேமுந்த்ராஜாம் நகர்ஹிரசர்போர்பந்தர்கேஷோத்கண்ட்லாபுஜ் ஆகிய விமான நிலையங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 15 வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை