உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

புதுடில்லி: டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தது. பின்னர், நேற்று முன் தினம், மாலை 5:00 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமல் ஆனது. இந்நிலையில் டில்லியில் பிரதமர் மோடி அவரது இல்லத்தில், முப்படை தலைமை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். எல்லையில் தற்போதைய சூழல் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடந்தது. தற்போது ஆலோசனை கூட்டம் நிறைவு அடைந்தது. ஆலோசனை முடிந்து அனைத்து அதிகாரிகளும் புறப்பட்டனர்.பாகிஸ்தான் அரசிடம் பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என ராணுவ அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டு கொண்டதாக டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K.n. Dhasarathan
மே 12, 2025 16:29

பாக்கிஸ்தான் ஒரு நம்பா தகுந்த நாடு இல்லை, அவர்களை முட்டை பூச்சியை போல நசுக்கி ஒழித்திருக்க வேண்டும், எல்லையில் உள்ள நம் படைகளை வாபஸ் பெற வேண்டாம், அவர்கள் மறுபடி தாக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் நம் படைகள் எல்லையில் இருக்கட்டும், இனி ஏதாவது தாக்குதல், ஊடுருவல் என்றால் மிக கடுமையான பதிலடி தரப்பட வேண்டும்.


Kasimani Baskaran
மே 12, 2025 13:40

ஒவ்வொரு தீவிரவாதிக்கும் இரண்டு கோடி பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால் நிறைய தீவிரவாதிகள் பிடித்துக்கொடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது


சமீபத்திய செய்தி