உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்யாவில் கூட்டு ராணுவ பயிற்சி: இந்தியா பங்கேற்பு

ரஷ்யாவில் கூட்டு ராணுவ பயிற்சி: இந்தியா பங்கேற்பு

புதுடில்லி: ரஷ்யாவில் ஒரு வாரம் நடைபெற உள்ள கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா பங்கேற்கிறது.ரஷ்யாவில் இன்று (செப்டம்பர் 10) முதல் 16ம் தேதி வரை ஒரு வார காலம் பலதரப்பு கூட்டு ராணுவப்பயிற்சி நடைபெற இருக்கிறது.இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:போர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தந்திரங்கள், நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ள பயன்படும் முயற்சி.65 வீரர்களைக் கொண்ட இந்திய ஆயுதப் படைகளின் ஒரு குழு, நிஸ்னியில் உள்ள முலினோ பயிற்சி மைதானத்தில் நடைபெறும் 'பயிற்சி சபாட்' நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டது. இந்தக் குழுவில் 57 இந்திய ராணுவ வீரர்கள், இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் மற்றும் இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர்.இவ்வாறு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ