உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்வதேச ஊழல் குறியீடு: இந்தியாவின் நிலை என்ன?

சர்வதேச ஊழல் குறியீடு: இந்தியாவின் நிலை என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஊழலை எதிர்த்துப் போராடும் நாடுகள் பட்டியலில் 2022ல் 85வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 93வது இடத்திற்கு சரிந்துள்ளது.உலக வங்கியின் முன்னாள் ஊழியர்களால் 1993ல் நிறுவப்பட்ட 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' அமைப்பு, கடந்த 30 ஆண்டுகளாக, 'சட்டத்தின்படி ஆட்சி செய்து, ஊழலை எதிர்த்துப் போராடும்' நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்து வருகிறது. இதற்காக உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம், தனியார் ஆலோசனை நிறுவனங்கள் உட்பட 13 தரவு மூலங்களைப் பயன்படுத்தி, தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்கிறது. அதன்படி, 2023ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.மொத்தம் 180 நாடுகள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் 100 மதிப்பெண்களில் அதிக மதிப்பெண் எடுத்துள்ள நாடுகள் படி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 90 மதிப்பெண்கள் பெற்ற டென்மார்க், தொடர்ந்து 6வது ஆண்டாக ஊழலை எதிர்க்கும் முதல் நாடாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து, 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து இரண்டாவது இடத்தையும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.நார்வே, சிங்கப்பூர், சுவீடன், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, லக்சம்பர்க் ஆகிய நாடுகள் 4 முதல் 10வது இடத்தை பிடித்துள்ளன. அமெரிக்கா 69 மதிப்பெண்களுடன் 24வது இடத்தையும், 43 மதிப்பெண்கள் பெற்று சீனா 76வது இடத்தையும் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டில் 85வது இடத்திலிருந்த இந்தியா, இந்த முறை 39 மதிப்பெண்களுடன் 93வது இடத்துக்கு இறங்கியிருக்கிறது. அண்டை நாடான பாகிஸ்தான், 29 மதிப்பெண்களுடன் 133வது இடத்தில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் சோமாலியா கடைசி இடத்தில் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

g.s,rajan
ஜன 31, 2024 21:05

இந்தியாவில் அரசியல்வாதிகள் லஞ்சம் மற்றும் ஊழலின் மூலம் முறைகேடாகச் சுருட்டிய சொத்துக்களை கட்சிப் பாகுபாடு இல்லாமல் பறிமுதல் செய்து உடனடியாக அரசுடமை ஆக்க வேண்டும் .


K V Ramadoss
ஜன 31, 2024 12:29

இரு செய்திகளும் ஒன்றாக வருகின்றன . ஊழல் தரத்தில் இந்தியா 39 மார்க்குகள் பெற்று 93 வது இடத்தில் இருக்கிறது. ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் இன்னம் அமைசராகவே இருக்கிறார். என்ன பொருத்தம் முன்னதுக்கு அடுத்தது விளக்கம்


Velan Iyengaar
ஜன 31, 2024 14:02

கொய்யால...ஒட்டுமொத்த இந்திய ஊழலுக்கான தரவரிசையை எப்படி எல்லாம் மாற்றிட பாக்குறானுங்க இந்த களவாணிபயலுங்க


Velan Iyengaar
ஜன 31, 2024 14:04

செந்தில்பாலாஜி ஊழல் அதிமுக ஆட்சியின்போது சுமார் பத்து வருடங்கள் முன்னாள் செய்தது.... இப்போ வந்திருக்கிற ஊழல் பட்டியல் மஹாநுபாவன் மோடி ஆட்சி காலத்துக்கான தரம் கேடிங்க.. எப்படி எல்லாம் கம்பி கட்டும் கதை விடுறானுங்க


அசோகன்
ஜன 31, 2024 12:27

சுடலையின் மைண்ட் வாய்ஸ்........ நம்ம கட்டுமரம் 60 வருஷமா அடிச்ச கொள்ளைய நாம 6 மாசத்துல அடிச்சிட்டோம் அப்படியிருந்தும் 150க்கு மேலே போகாமல் இன்னும் 93 லயே இருக்கா??.......... கணக்கு எடுத்தவன் தப்பா எடுத்திருபானோ


கண்ணன்
ஜன 31, 2024 12:12

சென்ற மாதத்திற்கு முன்பிருந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர், தற்போதுள்ள கர்நாடகா, கேரளா, சில மாதங்களுக்கு முன்பிருந்த மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், ஹிமாசலப்ரதேசம், தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு, ஜார்க்ண்ட், மே. வங்காளம் போன்ற மாநிலங்களால்தான் இந்த வரிசைக்குத் தள்ளப் பட்டுள்ளது நமது நாடு


தமிழ்
ஜன 31, 2024 12:03

இந்த பக்கோடாஸ்களுக்கு அறிவோ அறிவு.


விஸ்வநாத் கும்பகோணம்
ஜன 31, 2024 11:57

ஊழல் நடவடிக்கைகளில் சமரசமே கிடையாது என்றும் ஊழலை ஒழிப்பதே முதல் காரியமாக இருக்கும் என வீர முழக்கம் செய்த பாஜகவின் ஆட்சியில் இப்பட்டியலில் சரிவு கண்டது ஏன்? பாஜக மேல் ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூட இல்லை என்றாலும் ஊழல்வாதிகள் மேல் ஏன் நடவடிக்கை இல்லை? அமலாக்க துறையின் அதிகாரங்கள் பற்றி கோர்ட்டில் கேள்வி எழுப்புகிறார்கள். சிபிஐ எங்கள் மாநிலத்திற்குள் வரக்கூடாது என்று சட்டம் போடுகிறார்கள். ஊழலில்லாமல் ஆட்சி செய்தால் மட்டும் போதாது ஊழலை எதிர்த்து துணிச்சலான நடவடிக்கைகள் தேவை. ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் தேவை. ஒரு திறமையான வக்கீல் மூலம் ஊழல்வாதிகளை வெளியே கொண்டு வர முடிந்தால் ஊழல் எப்படி ஒழியும்? நீதிமன்ற சமரசங்கள் கூடாது. வெறும் இந்துத்வாவை பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. இந்தியாவின் புகழ்பெற்ற ஊழல்வாதிகள் அல்லது அரசியல்வாதிகள் சுகபோகங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பது பாஜக அரசுக்கு ஒரு தலைகுனிவுதான்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
பிப் 05, 2024 09:24

சவுக்கடி கருத்து.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 31, 2024 10:30

2014 ம் ஆண்டு நாம் எத்தனையாவது இடத்தில் இருந்தோம், தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். 2023 ம் ஆண்டு 93 வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறோம். சோமாலியாவைக் காணும்போது நாம் மிகவும் முன்னேறி இருக்கிறோம்.


அப்புசாமி
ஜன 31, 2024 09:56

85 பெருசா 93 பெருசா? இதுதாண்டா சாதனை.


Bellie Nanja Gowder
ஜன 31, 2024 14:29

இந்த சாதனைக்கு 90% பங்கு தமிழகத்தியே சாரும். அதுவும் பெருமளவு தி மு க வையே சாரும்,


Nalla
ஜன 31, 2024 09:52

நார்வே, சிங்கப்பூர், சுவீடன், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, லக்சம்பர்க் ஆகிய நாடுகள் 4 முதல் 10வது இடத்தை பிடித்துள்ளன


அப்புசாமி
ஜன 31, 2024 12:22

இன்னொண்ணு பாருங்க. முதல் 10 நாடுகளோடு நமது வர்த்தகம். மிகக் குறைவு. நம்ம ஸ்டைலுக்கு இவிங்க சரிப்பட்டு வர மாட்டாங்க.


R.RAMACHANDRAN
ஜன 31, 2024 09:49

இந்தியா ஊழலில் முன்னேறிய நாடு என்பதுடன் முதலிடத்தில் உள்ள நாடு என்பதும் கூட. ஊழல் ஒழிப்பு அமைப்புக்கள் எல்லாம் ஊழல் செய்பவர்களுக்கு உறுதுணையாக செயல்படுவதால் ஊழல் ஒழிப்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளாலும்.இந்நிலை. அரசு ஊழியர்கள் சட்டப்படியான கடமையை செய்யவில்லையேல் அல்லது சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டிருந்தால் லஞ்சம் பெற்றதாக அனுமானிக்க சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி