உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்

மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலக அளவில், அதிக மீன் பிடித்தலில் நம் நாடு இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாகவும் உலக மீன் சந்தையில் 8 சதவீத பங்களிப்பை இந்தியா அளித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:கடந்த 2015ம் ஆண்டில் இருந்து, பல்வேறு திட்டங்கள் வாயிலாக மீன்பிடி தொழிலில், 38,572 கோடி ரூபாய் முதலீட்டுக்கு அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த மீன் பிடித்தல் 195 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இத்துறை, ஆண்டுக்கு 8.74 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இத்துறையில் வளர்ச்சி தொடர, 34 மீன்வள, பதப்படுத்துதல் மையங்களை அரசு அறிவித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட மீன் வகைக்கு, தேவையான வினியோக தொடரை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.மேலும், மீன்பிடி படகுகளில் ட்ரான்ஸ்பாண்டர் கருவி இலவசமாக நிறுவப்பட்டதற்கு மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த ட்ரான்ஸ்பாண்டர் கருவி வாயிலாக மீனவர்களுக்கு உரிய நேரத்தில் மீன்பிடித்தல் தொடர்பான ஆலோசனைகள், வானிலை எச்சரிக்கைகள், பாதுகாப்பான பயண வழிகாட்டுதல்கள் வழங்கப்படுன்றன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kulandai kannan
அக் 06, 2025 20:01

குழம்பிய குட்டை என்றால் நமக்கே முதலிடம்.


அப்பாவி
அக் 06, 2025 12:52

முதலிடத்தில் சீனா.. அண்ட்டார்ட்டிகா வரை போய் மீன் பிடிக்கிறாங்க. சீக்கிரம் நாமளும் அவிங்க லெவலுக்கு முன்னேறணும்.


Vasan
அக் 06, 2025 07:24

காக்கா பிடித்தலில் தமிழகம் முதலிடம்.


Barakat Ali
அக் 06, 2025 05:18

இதுக்கெல்லாம் காரணம் எங்கள் அண்ணன் சீமான் ..... வாழ்க சீமான் ....


Field Marshal
அக் 06, 2025 06:44

மீன் மாநாடு ஒன்று நடத்தி மீன்களுடன் பேசுவாரா ?


சமீபத்திய செய்தி