உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தை தவிர்த்தது இந்தியா

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தை தவிர்த்தது இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் 'ஆப்பரேஷன் ரைசிங் லயன்' தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை மீது உறுப்பு நாடுகளான சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் உள்ளிட்டவை தங்கள் கருத்துகளை பதிவு செய்தன.இந்த தாக்குதல், அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படுவதாகவும், சர்வதேச சட்டத்தை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தின. ஆனால், இந்த அமைப்பில் உறுப்பு நாடாக உள்ள இந்தியா, இந்த அறிக்கை மீது எந்த கருத்தும் குறிப்பிடாமல் தவிர்த்தது.இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:இந்த விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளுக்கு இடையே பேச்சு நடத்த வழிவகை ஏற்படுத்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுபற்றி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்ரேல் மற்றும் ஈரான் பிரதிநிதிகளுடன் விவாதித்தார்.இருநாடுகள் இடையேயான மோதல் போக்கு பற்றி கவலையை வெளிப்படுத்தியதுடன், இதுபோன்ற பதற்றமான நடவடிக்கைகள் மேற்கொள்வதை தவிர்க்கும்படியும், பேச்சு நடத்தி சுமுகத்தீர்வு காணவும் அப்போது அவர் வலியுறுத்தினார்.இந்தியாவின் இந்நிலைப்பாடு பற்றி, மற்ற உறுப்பு நாடுகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் விவாதங்களில் இந்தியா பங்கேற்கவில்லை.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sampath
ஜூன் 15, 2025 09:12

சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ்....இவை ரஷ்யா தவிர பாகிஸ்தானை முன் நிறுத்தி நம்மை எதிர்த்த நாடுகள். இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவது மிக நல்லது .


Sampath
ஜூன் 15, 2025 09:07

இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் எதிரிகள். ஏர் இந்தியா விமானம் விபத்தில் மகிழ்ந்து பதிவிட்ட உள்நாட்டு பன்றி கூட்டம்....மோடிக்கு பிறகும் நல்ல தலைமை வேண்டும்.


S.L.Narasimman
ஜூன் 15, 2025 07:57

பெகல்காமில் அப்பாவி நம் மக்களை கொன்ற பாக்கிசுதானுக்கு எதிராக இந்த கூட்டம் கண்டனம் தெரிவித்தாங்களா? சதிகார கும்பல்.


Kasimani Baskaran
ஜூன் 15, 2025 06:41

இந்தியாவை தாக்க பாகிஸ்தான் முயன்ற பொழுது பல நாட்டு டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன - துருக்கி தவிர அதில் ஈரானும் அடங்கும். அடிப்படை வாதத்தில் ஊறித்திளைப்பவர்களுக்கு நட்பு என்பது என்ன என்று தெரியாது.


ஹரி
ஜூன் 15, 2025 08:30

சீனா, அமெரிக்காவின் விமானங்களையும் பாகிஸ்தான் பயன் படுத்தியது. அதுக்காக அவிங்களோட வியாரம் செய்யாம இருக்கோமா?


சமீபத்திய செய்தி