உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாகிர் நாயக்கிற்கு பாகிஸ்தான் அளித்த வரவேற்பு: இந்தியா கண்டனம்

ஜாகிர் நாயக்கிற்கு பாகிஸ்தான் அளித்த வரவேற்பு: இந்தியா கண்டனம்

புதுடில்லி: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாசை, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஜாகிர் நாயக் சந்தித்து பேசினார். அந்நாட்டில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக், 58, கடந்த 2012ல், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சர்ச்சை கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.நம் அண்டை நாடான வங்கதேச தலைநகர் டாக்காவில், 2016 ஜூலையில் ஹோட்டல் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததை தொடர்ந்து, ஜாகிர் நாயக் நாட்டை விட்டு தப்பியோடினார்.இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு குண்டு வெடிப்பை நடத்தியதாக ஒருவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாகிர் நாயக் மீதான பயங்கரவாதத்துக்கு ஆள் திரட்டியது, நிதி வழங்கியது தொடர்பான வழக்குகளை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. நம் நாட்டை விட்டு தப்பியோடியதால், ஜாகிர் நாயக்கை தப்பியோடிய நபராக மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில், கடந்த 18 ம் தேதி பாகிஸ்தான் சென்ற ஜாகிர் நாயக், அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் மரியம் நவாசை சந்தித்து பேசினார். லாகூரின் ரைவிண்டி நகரில் உள்ள நவாஸ் குடும்பத்திற்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த இந்த சந்திப்பின் போது இரு தரப்பும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். ஆனால், என்ன விஷயம் குறித்து பேசப்பட்டது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இதனை பாகிஸ்தானை சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டது.இதற்கு கண்டனம் தெரிவித்து,மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தானில் ஜாகிர் நாயக்கிற்கு விருந்தோம்பல் அளிக்கப்படுவது இது முதல் முறை கிடையாது. இந்தியாவில் தேடப்படும் ஒரு நபருக்கு இவ்வளவு ஆதரவு வழங்குவதன் அர்த்தம் என்ன என்பதையும் நமக்கு காட்டுகிறது என்றார்.முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீசும் ஜாகிர் நாயக்கை சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், கடுமையாக அவரை விமர்சித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Yaro Oruvan
மார் 22, 2025 22:34

ஹா ஹா அவனுவலால வேற என்ன செய்யமுடியும் ??? பிஞ்சுபோன பிரஸ் தலையணை வச்சி சீன போடுவானுவ ... போடட்டும் அவனுவலால முடிஞ்சது அது .. ஜெய்ஹிந்


Nandakumar Naidu.
மார் 22, 2025 20:31

Govt ask unknown men to eliminate this enemy of humanity.


R. SUKUMAR CHEZHIAN
மார் 22, 2025 19:43

மர்ம நபர்களுக்கு வேலை வந்துவிட்டது என்று நினைக்கிறேன் ஜாகிர் நாயக் தெரு நாய் மாதிரி அடிபட்டு சாக போகிறான் என தெரிகிறது.


அப்பாவி
மார் 22, 2025 19:19

மூர்க்கத்தில் டை கட்ட அனுமதி உண்டா?


ஈசன்
மார் 22, 2025 17:50

மும்பை குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல் பட்டவன் ஹபீஸ் சையதுக்கு தீவிரவாதிக்கு அடைக்கலமே கொடுத்த கேடுகெட்ட நாடு, இவனை வரவேற்பதில் அதிசயம் என்ன இருக்கிறது.


Svs Yaadum oore
மார் 22, 2025 17:48

இந்த ஆளுக்கு பாகிஸ்தானில் அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளதாம் ......இந்தியாவின் இந்த கண்டனத்தை கண்டித்து விடியல் திராவிட அக்கா மவுண்ட்ரோட்டில் கவர்னர் மாளிகையை முற்றுகை இட்டு மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார் ....மத சார்பின்மையை விடியல் திராவிட அக்கா எப்போதும் விட்டு கொடுக்க மாட்டார் ....


அசோகன்
மார் 22, 2025 17:24

அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில மர்ம நபர்கள் கையில் சீக்கிட்டிட்டே ஜாகிரு..........


Sree
மார் 22, 2025 18:39

அருமையான வாசகம் .இறுதி சடங்கு ஊர்வலம் விரைவில் எதிர்பார்க்கிறேன்


Srinivasan Krishnamoorthy
மார் 22, 2025 22:47

we will wait for the good news


naranan
மார் 22, 2025 17:20

இந்த மஹா மூர்க்கனுக்கு பாகிஸ்தான் மற்றும் மலேசியா நாடுகளின் ஆதரவு உள்ளது. ஆனால் முதலில் இவனை இந்தியாவிலிருந்து தப்ப விட்டது எந்த அரசு? இறுதியில் இவனை உளவுத் துறை பார்த்துக்கொள்ளும் என்று நம்பலாம்.


B MAADHAVAN
மார் 22, 2025 17:04

ஒரு இந்தியர், இந்திய நாட்டின் முன் அனுமதி இன்றி, பாகிஸ்தான் நாட்டிற்கு அந்நாட்டு அனுமதியும் பெறாமல் சர்வ சாதரணமாக போக முடியுமா.. இந்த தேடுகிற வாதி, தீவிரவாதிக்கு அந்நாட்டில் மரியாதை கொடுக்கிறார்கள் என்றால், நாமும் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் பலுசிஸ்தான் போன்ற நாட்டு தீவிரவாதிகளையும் இங்கு அழைத்து ராஜ மரியாதை செய்தால் தான் அந்த பாகிஸ்தான் பயலுகளுக்கு புரியும். இவனைப் போலவே இங்கு ஊளையிடும் எல்லா பாகிஸ்தான் ஆதரவாளர்களும் அங்கு சென்று விட்டால் நாடு நலம் பெறும். திரும்ப இந்த நாட்டிற்கு வர அனுமதி தரக் கூடாது.


karthik
மார் 22, 2025 17:00

பலூசிஸ்தான் வீரர்களை அழைத்து வந்து நாம் நேரிடையாக ஒத்துழைப்பை அறிவிக்க வேண்டும்....இந்த பாக்கி ஜென்மனுக இல்லாட்டி திருந்தவே திருந்தாதுக