உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆஸி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோகித்துக்கு பதில் கில் கேப்டனாக நியமனம்

ஆஸி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோகித்துக்கு பதில் கில் கேப்டனாக நியமனம்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா அணி அக்., மற்றும் நவ., மாதங்களில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டெஸ்ட் அணிக்கான கேப்டனாக செயல்பட்டு வரும் இளம் வீரர் கில், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் ஷர்மா, ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஆனால், ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் ரோகித் இடம்பிடித்த நிலையில், கில்லுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். கில் தலைமையிலான ஒருநாள் அணியின் வீரர்கள் விபரம் பின்வருமாறு;ரோகித் ஷர்மாவிராட் கோலிஸ்ரேயாஷ் ஐயர் (துணை கேப்டன்)அக்ஷர் படேல்கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்)நிதிஷ்குமார் ரெட்டிவாஷிங்டன் சுந்தர்குல்தீப் யாதவ்ஹர்ஷித் ரானாமுகமது சிராஜ்அர்ஷ்தீப் சிங்பிரசித் கிருஷ்ணாதுருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்)ஜெய்ஸ்வால்ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் விபரம்சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)அபிஷேக் ஷர்மாசுப்மன் கில் (துணை கேப்டன்)திலக் வர்மாநிதிஷ்குமார் ரெட்டிஷிவம் துபேஅக்ஷர் படேல்ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்)வருண் சக்ரவர்த்திபும்ராஅர்ஷ்தீப் சிங்குல்தீப் யாதவ்ஹர்ஷித் ரானாசஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)ரிங்கு சிங்வாஷிங்டன் சுந்தர், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி