உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொருளாதார பலத்தால் சொந்தக் காலில் நிற்கும் இந்தியா: மத்திய நிதியமைச்சர் பெருமிதம்

பொருளாதார பலத்தால் சொந்தக் காலில் நிற்கும் இந்தியா: மத்திய நிதியமைச்சர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பொருளாதாரம் காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.டில்லி பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் இந்தியா வேகமாக முன்னேறும் காலத்தில் நாம் இருக்கிறோம். இந்தியா அதன் மக்கள் தொகை மற்றும் அதன் புவியியல் ரீதியில் அமைப்பக்காக முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், இந்தியா ஒன்றாக இருக்கிறது. பொருளாதார பலம் காரணமாக இந்தியா தனித்து சொந்தக்காலில் உயர்ந்து நிற்கிறது. இந்தியாவை மையப்படுத்திய கொள்கை மற்றும் கொள்கை திட்டமிடலையும் நாம் அதிகரிக்க வேண்டும். மற்றும் வளரும் பொருளாதாரத்துக்கான மாடலை உருவாக்க வேண்டும். வறுமையில் இருந்து 2.5 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர். விரைவில் இந்தியா உலகின் மிகப்பெரிய 3வது பொருளாதார நாடாக மாறும்.2014 ல் உலகின் 10வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா இன்று 5வது இடத்தில் இருக்கிறது. அடுத்து 4வது இடத்துக்கும், விரைவில் 3வது இடத்துக்கும் வரப்போகிறது. இது தான் இந்தியாவை எழுச்சி பெறச் செய்கிறது. நாம் அனைவரும் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நமது பொருளாதாரம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். பொருளாதாரத்துக்கு பங்களிப்பு அளிக்கும் இந்தியர்கள் என்ற முறையில் நமது முயற்சிகள் மூலம் நமது இலக்குகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை வைக்க வேண்டும். நமது பொருளாதாரம் சரியான பாதையில் இல்லை என சொல்பவர்களை நம்பி நாம் அடிபணியக்கூடாது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டை எப்படி இறந்த பொருளாதாரம் எனச் சொல்ல முடியும். வெளியில் இருந்து வருபவர்கள் நம்மை கிண்டல் செய்வார்கள். ஆனால், நாட்டிற்குள் இருக்கும் நாம் எப்போதும் நமது சொந்த முயற்சிகளையும், சாதனைகளையும் ஒரு போதும் குறை சொல்லக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Padmasridharan
நவ 05, 2025 10:32

நன்று. ஆனால் இதன் வளர்ச்சிக்கு படித்த பலரும் குடும்பத்தில் சந்தோஷமில்லாமல் தனியாக விவாகரத்து பெற்று, வரி செலுத்திக்கொண்டு வழியில் கிடைப்பதெல்லாம் வெறும் சுவைக்காக உண்டு மடிய வேண்டுமா. அஜித் என்பவர் மனைவி, குழந்தைகளுடன் பெருமையாக சொல்லிக்கொண்டு வாழ்க்கையில் சாதித்து வருகிறார். ஆனால் விஜயம் பெரும் புதிய கட்சித்தலைவர் மனைவியையும் குழந்தைகளைப் பற்றி எதுவுமே பேச முடியாமல் தனித்து இருக்கிறார். பவன் போன்ற பலரும் 2-3 மனைவிகளுக்கு 1-2 பிள்ளைகளை கொடுத்து கூட்டணி அரசியல் நடத்துகிறார். சாதாரண மக்களின் கதி அதோ கதி, குடிக்கும் தண்ணீர் காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம். வரிக்காக சிகரெட் மற்றும் மது விற்பனை. உடலையும் மனதையும் வறுத்திக்கொண்டு பலரும் தனியாக பொருளாதாரத்தை மட்டுமே வளர்த்து என்ன பயன். குடும்பத்திற்காக சிறுவர்கள் சம்பாதிக்க உழைத்தால் child lalabour குற்றம் ஆனால் சினிமாவில் நடித்து சம்பாதித்தால், விளையாடி பதக்கம் ஜெயிக்க கஷ்டப்பட்டால் பெருமையாக கருதப்படுகிறது. child labour இல்லையா.


Kasimani Baskaran
நவ 05, 2025 04:02

பெருமை கொள்ள வேண்டிய தருணம். காங்கிரசை ஒழித்துக்கட்டினால் உண்மையான சுதந்திரக்காற்றை அனைவரும் சுவாசிக்க முடியும்.


தாமரை மலர்கிறது
நவ 05, 2025 01:26

சிறப்பான பிஜேபி ஆட்சியில் அடுத்த பத்து வருடத்தில், சூப்பர் பவர் போட்டி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தான் இருக்கும். கடந்த ஐந்தாயிர வருடங்களாக இருந்த பெருமையை பிஜேபி அரசு மீட்டெடுக்கும்.


R Dhasarathan
நவ 04, 2025 20:42

ஆமாம் ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டு பணக்காரர்களுக்கு சாதகமாக எப்படி இருப்பது என்று உலகிற்கு காட்டுகிறீர்கள்.


vivek
நவ 04, 2025 22:43

டாஸ்மாக் சொம்புகளுக்கு மட்டும் ஒண்ணுமே மண்டையில் ஏறாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை