வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மறுபடியும் மாமல்லை, கண்ணாடி அறையா?
பிரிக்ஸ் கரன்ஸி ... முடிவு எந்த நிலையில் உள்ளது....
Acidic என்று படித்தேன் பெயரை
புதுடில்லி: 2026ம் ஆண்டு இந்தியா நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் சுற்றுலா விசாவை மீண்டும் தொடங்குவதன் மூலம், நேரடி விமானங்கள் மற்றும் விசா வசதி மூலம் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகிய இருவரும் ஆலோசித்தனர். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். பயங்கரவாதம், உலகளாவிய பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கான தலைமைத்துவத்திற்கும் தியான்ஜின் உச்சிமாநாட்டிற்கும் பிரதமர் மோடி ஆதரவை தெரிவித்தார். 2026ம் ஆண்டு இந்தியா நடத்தும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி அழைத்தார். அழைப்பிற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்த சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்திற்கு சீனாவின் ஆதரவை வழங்கினார். இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மறுபடியும் மாமல்லை, கண்ணாடி அறையா?
பிரிக்ஸ் கரன்ஸி ... முடிவு எந்த நிலையில் உள்ளது....
Acidic என்று படித்தேன் பெயரை