உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலக வர்த்தகத்தில் 3வது இடத்தை பிடிக்கும் இந்தியா; ஆய்வில் தகவல்

உலக வர்த்தகத்தில் 3வது இடத்தை பிடிக்கும் இந்தியா; ஆய்வில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அடுத்த 5 ஆண்டுகளில் உலக வர்த்தகத்தில் இந்தியா 6 சதவீத பங்களிப்புடன், 3வது இடத்தில் இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.டி.எச்.எல்., மற்றும் நியூயார்க் யுனிவர்சிட்டி ஸ்டெர்ன் ஸ்கூல் ஆப் பிசினஸ் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், அடுத்த 5 ஆண்டுகளில் உலக வர்த்தகத்தில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய நாடுகளில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சீனா 12 சதவீதத்துடன் முதல் இடத்திலும், அமெரிக்கா 10 சதவீதத்துடன் 2வது இடத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2024ம் ஆண்டில் உலக வர்த்தகத்தில் இந்தியா 13வது இடத்தில் இருந்தது. இந்தக் காலகட்டங்களில் உலக வர்த்தக வளர்ச்சி 2 சதவீதமாக இருந்த போதும், இந்தியாவின் வளர்ச்சி 5.2 சதவீதமாக இருந்துள்ளது.இந்தியாவின் விரைவான வணிக வளர்ச்சி, அதன் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்னாட்டு வணிகத்தில் அதிகரித்து வரும் பங்களிப்பு ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவை விட சீனா வர்த்தகம் சார்ந்த பொருளாதாரத்தில் முன்னிலை வகிப்பதாக கருதப்பட்டாலும், 2023ம் ஆண்டில் இந்தியாவின் சரக்கு வர்த்தகம், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சீனாவை விட அதிகரித்தே காணப்பட்டுள்ளது. அதாவது, சரக்கு மற்றும் சேவையில் சீனாவை விட இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் எதிர்கால வர்த்தக வளர்ச்சியானது, உற்பத்தி துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் இன்னும் வலுப்பெறும் என்று அந்த ஆய்வின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

A1Suresh
மார் 24, 2025 00:42

சும்மா தானாகவே 3 ஆவது இடத்தை பிடிப்பதில்லை. அதற்கான திட்டங்கள், அது மட்டும் போறாது. திட்டங்களை நிறைவேற்றுதல். இதற்காக 20 வருடங்கள் ஒரே கட்சியின் நிலையான ஆட்சி. தேசத்தின் மீது மிகுந்த அபிமானம். ஊழலற்ற நிர்வாகம். முன்னேற்றி, பெயரெடுத்து காட்ட வேண்டும் என்ற முனைப்பு. அப்பழுக்கற்ற தலைவர் மோடிஜி வாழ்க. சாகர் மாலா, மேக் இன் இண்டியா, பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள், காஷ்மீரில் 370 ஒழிப்பு, நக்சலைட்டு ஒழிப்பு என பல்வேறு திட்டங்களால் சாத்தியமாகிறது.


A1Suresh
மார் 24, 2025 00:38

தமிழ் தேசியவாதிகளுக்கும், திராவிட பயல்களுக்கும் பிடிக்காத செய்தி. ஐயோ பாவம்


A1Suresh
மார் 24, 2025 00:38

தமிழ் தேசியவாதிகளுக்கும், திராவிட பயல்களுக்கும் பிடிக்காத செய்தி. ஐயோ பாவம்


B MAADHAVAN
மார் 23, 2025 23:57

நல்ல உரக்க சொல்லுங்கள். வடக்கில் உள்ளவர்களுக்கு கேட்கிறது, தெரிகிறது, புரிகிறது. தெற்கில், அதுவும் தமிழகத்தில் பலருக்கு காதில் பிரச்சினை. சரியாக கேட்பதில்லை. அதனால் பலருக்கு தெரிவதில்லை. எனவே, நன்கு உரக்க அடித்து சொல்லுங்கள்.


Mediagoons
மார் 23, 2025 22:48

இதனால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை எந்த பயனும் இல்லை நாட்டை அந்நியர்களுக்கு ஒரு சில கார்போரேட்டு குண்டர்களுக்கு விற்றுவிட்டு கும்பல்


vivek
மார் 24, 2025 06:14

ரவுடிகளுகு....அதாவது goon களுகு இங்கு பேச அருகதை இல்லை...


மு செந்தமிழன்
மார் 24, 2025 07:31

பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரி போய் வயிறு எரிச்சலுக்கு மருந்து வாங்கி குடிக்கவும் உங்களை போல உள்ளவர்கள் பாரத தேசத்தின் சாபக்கேடு. நாடு முன்னேறுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை.


சிட்டுக்குருவி
மார் 23, 2025 21:57

இதற்க்கு நாட்டில் பெரும்பான்மையாக தடையாக இருப்பது/இருக்கபோவாது பெரும்பாலான மாநிலங்களில் நிகழும் கட்டிங்,கமிஷன்,கரப்ஷன்.இதை போர்கால அடிப்படையில் எதிர்கொள்வது முக்கியமானது.புதிய கடுமையான சட்டங்கள் ஏற்படுத்துவது,நடைமுறை படுத்துவது மிக முக்கியம். முக்கியமாக கடந்த 40 வருடங்களில் ஆட்சிஅதிகாரத்தில் இருந்தவர்களின் சொத்துகளை ஆடிட் செய்ய சட்டம் இயற்றபடவேண்டும்.முதன் முதலில் தேர்தலில் போட்டி இடும்போது அவர்கள் கொடுத்த சொத்து மதிப்பை அடிப்படையாக வைத்து தற்போதுள்ள சொத்து மதிப்பை ஒப்பிட்டால் அதன் அமோக வளர்ச்சி எப்படி நிகழ்ந்தது என்று தெரியும். தவறான சட்டத்திற்கு புறம்பான வழிகளில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்வதுடன் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும். அரசு சொத்துக்களை ஆட்டயம் போடுவது நேஷனல் குற்றமாக்கபடவெண்டும்.அரசின் எந்த அனுமதியின்றி நடவடிக்கை எடுக்கும் ஒரு தன்னிச்சையான நேர்மையாக செயல்படும் அமைப்பை உருவாக்கிடவேணும். 100 கோடிகளுக்கு மேல் பணம்/பொருளாதாரம் குற்றங்களில் ஈடுபடுவோரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கபடவெண்டும். அப்போது தான் நாடு திருந்தி மூன்றாம் நிலைக்கு வரமுடியும். நேர்மையான பணவர்தனை /வியாபார/பொருளாதார நடவடிக்கைகள் நடந்தால் தான் அந்த நிலையை எட்டமுடியும்.


Saai Sundharamurthy AVK
மார் 23, 2025 21:54

மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு வாழ்த்துக்கள்.


கிஜன்
மார் 23, 2025 21:42

சுதந்திரம் அடைந்த உடனேயே மக்கள்தொகையில் 2 ஆவது இடத்தையும் ... சில ஆண்டுகளிலேயே முதலிடத்தையும் பிடித்த இந்தியா .... மற்ற சாதனைகளுக்காக .... 70 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபடுகிறது ....


Gokul Krishnan
மார் 23, 2025 21:57

சாதாரண மக்களை விட இந்திய அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் நீதிபதிகள் ஆகியாரிடம் மட்டுமே கோடி கோடியாக கள்ள பணம் உள்ளது. வேண்டும் என்றால் ஊழலில் முதலிடம் வரலாம். யார் ஆட்சியும் சரி இல்லை


Pollachi tamilan
மார் 23, 2025 22:46

சார் , நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை . இந்தியா போன்ற நாடு சீனா போலவும், அமெரிக்கா போலவும் நிச்சயம் வர முடியாது. இது பகல் கனவு.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மார் 23, 2025 21:13

செப்டம்பர் 9 முதல் இன்று வரை 1.20 கோடி காலி...!சும்மா எதுக்கு பீலா?


aaruthirumalai
மார் 23, 2025 20:21

இந்த சூழ்நிலைக்கேற்ப அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நேர்மையாக இருந்தால் எப்படிங்க இருக்கும்.


Nagendran,Erode
மார் 23, 2025 21:08

இப்ப நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க கமல் மாதிரி புரியாம பேசாதீங்க...


சமீபத்திய செய்தி