உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது: பிரதமர் மோடி மகிழ்ச்சி

இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது: பிரதமர் மோடி மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற ஒப்பந்தத்திற்கான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார் கெய்மரை இந்தியா வரும்படி அழைப்பு விடுத்து உள்ளார்.தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக இந்தியா - பிரிட்டன் இடையே கடந்த 2022ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடந்துவந்தது. பிரிட்டன் பிரதமராக இருந்தபோரீஸ் ஜான்சன் ஆட்சி காலத்தில் இந்த பேச்சுவார்த்தை துவங்கினாலும், இந்தியர்களுக்கு விசா, பிரிட்டன் ஏற்றுமதி செய்யும் கார் மற்றும் மதுபானத்திற்கான வரி விகிதம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே இழுபறி நீடித்து வந்தது.இச்சூழ்நிலையில், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்பட்டதைதொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி- பிரிட்டன் பிரதமர் ஸ்டார் கெய்மர் இருவரும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அப்போது, இரு நாட்டு தலைவர்களும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதற்கு இருவரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்த ஒப்பந்தம், இரு தரப்புக்கும் பலனளிக்கும். இதனால், வர்த்தகம், முதலீடு, கண்டுபிடிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியன அதிகரிக்கும்.இந்த ஒப்பந்தம் மூலம் உலக நாடுகளுக்கான சந்தைகளை திறப்பதுடன், புதிய தொழில் வாய்ப்புகளையும், மக்களுக்கு இடையிலான தொடர்புகளையும் அதிகரிக்கும்.இந்தியா - பிரிட்டன் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவை அதிகரிக்க இருவரும் ஒப்புக் கொண்டனர். இந்த ஆலோசனையின் போது ஸ்டார் கெய்மரை இந்தியா வர வேண்டும் என மோடி அழைப்பு விடுத்தார். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டு உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

thehindu
மே 06, 2025 21:11

அம்பானி அதானிகளை காக்க நாடு முழுவதும் போர்ப்பிரகடனம் செய்வது போதாது என்று மேலும் மேலும் அவர்கள் கொள்ளையடிக்க வழிவகுக்கும் கொள்ளைக்கார கும்பல்


அப்பாவி
மே 06, 2025 21:04

ஹையா... அந்நிய அடையாளத்தை அழிச்சிட்டோம்.


SUBBU,MADURAI
மே 07, 2025 01:22

பல்செட்டுப்... கட்டியும் உனக்கு திமிர்க்.. போகலை ஏலே எப்போதும் இதே வேலையாகத்தான் திரிவியா உனக்கு எப்படி சோறு போடுகிறான்கள் என்னைப் போல ஆளளென்றால் தயவு தாட்சண்யம் இல்லாமல் உன்னை விஷம் வைத்து கொன்று விடுவேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை