உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை; ஒப்பந்தம் ஏற்படுமா என எதிர்பார்ப்பு

இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை; ஒப்பந்தம் ஏற்படுமா என எதிர்பார்ப்பு

வாஷிங்டன்: ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த தலைவலியாக உருவாகியுள்ள அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக இந்தியா-அமெரிக்க அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. பேச்சுவார்த்தை முடிவில் ஒப்பந்தம் ஏற்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஐந்து சுற்றுக்கள் இந்த பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், விவசாயம் மற்றும் பால்பண்ணைத் துறையில் இந்திய சந்தையை திறந்துவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால், மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது.இந்நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தடைபட்டது. அமெரிக்க பிரதிநிதிகளும் இந்தியா வரவில்லை.இதனிடையே, சமீபத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என டிரம்ப் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடியும், இந்த பேச்சுக்களை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன எனத் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே தடைபட்டு இருந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று (செப் 16) மீண்டும் தொடங்கி உள்ளது. இரு நாட்டு அதிகாரிகளும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். இந்தியா சார்பில், வர்த்தகத்துறை சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் பங்கேற்றுள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வர்த்தக துணை பிரதிநிதி பிரண்டன் லின்ச் பங்கேற்று இருக்கிறார். பேச்சுவார்த்தை முடிவில் ஒப்பந்தம் ஏற்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sekar
செப் 16, 2025 18:12

இந்த பேச்சு வார்த்தை நமக்கு மிகவும் முக்கியமானது. அறிவு சார்ந்த பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். நமது நாட்டின் இறையாண்மையை எந்த சூழலிலும் இம்மியளவு கூட விட்டு தரக்கூடாது அதே சமயம் அமெரிக்காவிடம் நல்லிணக்கம் ஏற்பட்டு உறவு மேம்பட வேண்டும். இதில் வெற்றிபெற்றால் நமது நாட்டின் ஆட்சியாளர்கள் திறமைக்கு ஒரு சிறந்த சவாலாக இது அமையும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.


அப்பாவி
செப் 16, 2025 15:59

கையெழுத்தாகக் கூடாதுன்னு புட்டின் வேண்டாத தெய்வங்களை வேண்டிக்கிட்டிருக்காங்களாம்.


சாமானியன்
செப் 16, 2025 13:56

கண்டிப்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகாது.


KRISHNAN R
செப் 16, 2025 13:53

மிக உஷாராக இருக்க வேண்டும்... இல்லை என்றால் நம்... மக்கள் அவதி படவேண்டிய நிலை ஏற்படும்


ராமகிருஷ்ணன்
செப் 16, 2025 13:39

ஒப்பந்தம் ஒருபக்கம் இருந்தாலும் அமெரிக்க அதிகாரத்திற்கு அடி பணிய கூடாது. விதைகள் இல்லாத விஷ உணவு கூடவே கூடாது


MARUTHU PANDIAR
செப் 16, 2025 13:29

அமெரிக்கா தனது மரபணு மாற்றிய தானியங்களால் 140 கோடி இந்தியர்களை சிறிது சிறிதாக எதற்கும் உதவாத நடை பிணங்களாக மாற்றி, அவர்கள் நாட்டு மருந்து கம்பெனி முதலாளிகளின் மருந்துகளையே ஆயுசுக்கும் நம்பி இருக்கும் படி ஆக்கி தனது அடிமையாக மாற்றி விடுவான். புரியுதா உபிஸ் ,இத்தாலிய மற்றும் சிவப்பு தொப்பி அடிமைஸ் ?


அப்பாவி
செப் 16, 2025 15:58

இந்திய மருந்து கம்பெனிகள்தான் அவிங்க கண்டுபுடிச்ச மருந்தை இங்கே தயாரிச்சு அவனுக்கு அனுப்பி காசுபாக்குது.


Venugopal S
செப் 16, 2025 18:21

இந்த வாட்ஸ்அப், நாக்பூரில் இருந்து வரும் செய்திகளை நம்பும் அப்பாவி சங்கிகளை நம்பி தான் பாஜக கட்சியே இருக்கிறது!


MARUTHU PANDIAR
செப் 16, 2025 13:22

இந்தியாவில் 140 கோடி மக்கள் என்று மார் தட்டுகிறார்களே எங்கள் மக்காச் சோளத்தை வாங்கி டபின்பதற்கு என்ன தடை என்று கேட்டு மிரட்டுகிறான். 140 கோடியை இவன் ஆட்டு மந்தை மாட்டு மந்தை என்று எண்ணி விட்டானா? இவன் போடும் சோள தீவனத்தை விழுங்க? அது அப்படியே மெல்லக் கொலும் சரக்கு. கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலத்தை கெடுத்து, பிறகு சேய் செய்யும் சாக்கில் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் மருந்தை திணிப்பான். சோள வியாபரம் , பிறகு மருந்து வியாபாரம் .


Ramesh Sargam
செப் 16, 2025 12:56

அமெரிக்க அதிகாரிகள் நிலமை பரிதாபம். அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் செயல்பட முடியாது.


Moorthy
செப் 16, 2025 12:50

இந்தியா, அமெரிக்கா இருவருக்குமே நிர்பந்தம் சீக்கிரம் கையெழுத்து போடுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை