உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா; கில் படைத்த புதிய சாதனை

இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா; கில் படைத்த புதிய சாதனை

ஆமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.இரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி ஆமதாபாத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் ரோகித் ஷர்மா 2வது ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு, வந்த வீரர்கள் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். கோலி 52 ரன்னில் அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய இளம் வீரர் கில் (112)சர்வதேச கிரிக்கெட்டில் தனது 7வது சதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமில்லாமல், ஆமதாபாத் மைதானத்தில் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என 3 வடிவ கிரிக்கெட் தொடரிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஒரே மைதானத்தில் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சச்சின், கோலி கூட சதம் அடித்தது இல்லை. இதைத் தொடர்ந்து, ஸ்ரேயாஸ் ஐயர் (78), கே.எல். ராகுல் (40) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவி 356 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து, பேட் செய்த இங்கிலாந்து வீரர்கள் ஓரளவுக்கு ரன்களை குவித்தாலும், யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால், அந்த 34.2 ஓவர்களில் 214 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்கமாக பாண்டன், ஆட்டின்சன் தலா 38 ரன்களும், டக்கெட் 34 ரன்னும் குவித்தனர். இந்திய அணி தரப்பில், அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, அக்ஷர் படேல், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

subramanian
பிப் 12, 2025 21:28

ஆஸ்திரேலிய அணியை மெல்பர்ன் மைதானத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்ல இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.


subramanian
பிப் 12, 2025 21:26

ஓவல், லார்ட்ஸ் மைதானத்தில் ஒயிட் வாஷ் செய்தால் மிகவும் நன்று.


சந்திரன்,போத்தனூர்
பிப் 12, 2025 20:58

கிரிக்கெட்டை கத்து கொடுத்தவனுக்கே சரியான பாடம் கற்பித்த இந்தியா.. வாழ்த்துக்கள்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை