கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாத இந்தியா
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
திருவனந்தபுரம்: கேரளாவில், 1957ல் முதல் முறையாக, கம்யூனிஸ்ட் ஆட்சியை பிடித்தது. இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதல்வரானார். அடுத்து 1977ல் மேற்கு வங்கத்திலும், 1978ல் திரிபுராவிலும், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை பிடித்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில், ஏதேனும் ஒன்றிலாவது, மார்க்சிஸ்ட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு இருந்து வந்தது. கடந்த 2011ல் மேற்கு வங்கத்திலும், 2018ல் திரிபுராவிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை இழந்தது. ஆனாலும், 2016 முதல் கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் ஆட்சி நடந்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை இழந்துள்ளது. இதனால், இந்தியாவில் எந்த மாநிலத்திலும், கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.