உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இந்திய படை தயார்; ஆபரேஷன் சிந்தூர் உதாரணம் என்கிறார் அமித்ஷா!

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இந்திய படை தயார்; ஆபரேஷன் சிந்தூர் உதாரணம் என்கிறார் அமித்ஷா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இந்திய படை தயாராக உள்ளது. இந்த உறுதிப்பாட்டிற்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த உதாரணம்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: சுயராஜ்யத்தை பாதுகாக்கும் பொறுப்பு இப்போது 140 கோடி இந்தியர்களிடம் உள்ளது. சுயராஜ்யத்தை நிலைநாட்ட போராட வேண்டிய நேரம் வந்த போது, நாங்கள் அதை செய்தோம். நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இந்திய படை தயாராக உள்ளது. இந்த உறுதிப்பாட்டிற்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த உதாரணம். தக்க நேரத்தில் எங்களது தலைமையும், படையும் நிரூபித்தது. எதிர்மறை எண்ணங்கள் என் மனதில் தோன்றும்போதெல்லாம், நான் வழக்கமாக மஹாராஷ்டிரா மன்னராக விளங்கிய சிவாஜியையும், பேஷ்வா பாஜிராவையும் பற்றி நினைப்பேன்.மிகவும் பாதகமான சூழல்களுக்கு மத்தியில் அவர்கள், இறையாண்மை மிக்க ஓர் அரசை இங்கே நிறுவினார்கள். அது அவர்களால் முடிந்தது. அதை நினைத்துப் பார்ப்பேன். பாஜிராவின் சிலையை நிறுவுவதற்கு மிகவும் பொருத்தமான இடம், இந்த தேசிய பாதுகாப்பு அகாடமி. இங்குதான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nada Rajan
ஜூலை 04, 2025 21:21

ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் போது கடுமையாக உழைத்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள்


Nada Rajan
ஜூலை 04, 2025 21:20

ஆபரேஷன் சிந்தூர் வாழ்க... ஜெய்ஹிந்த்


K.n. Dhasarathan
ஜூலை 04, 2025 21:11

உள்துறை அமைச்சரே ராணுவ நடவடிக்கை பற்றி ராணுவ அமைச்சர் தான் பேசணும் அதில் நீங்கள் எப்படி பங்கு கேட்கலாம் ? அடுத்து பஹல்காம் தாக்குதல் எப்படி நடக்கமுடிந்தது ? அந்த பாதுகாப்பு குறைபாடு யார் தவறு ? சரி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடித்து விடீர்களா ? இல்லை இன்னும் இல்லையா ? ஏன் இன்னும் பிடிக்கமுடியவில்லை ? உளவு துறை வேலை செய்கிறதா ? செய்திகள் ஏன் இன்னும் ஒன்றும் வரவில்லை ? முடக்கப்பட்டு விட்டதா ? கேள்விகள் பல ...பதில்தான் இல்லை.


vivek
ஜூலை 05, 2025 06:24

இருநூறு ரூபாய் தசரத கொத்தடிமை..... நீ ஏன் e கேட்கிறாய்


ஆரூர் ரங்
ஜூலை 05, 2025 14:26

15 ஆண்டுகளுக்கு முன் நடந்த திமுக வின் தா கிருட்டிணன், ராமஜெயம் கொலைக் குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை. என்னாச்சு? யார் பொறுப்பு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை