வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் அவருடன் செல்லும் மற்ற விண்வெளி வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும். வாழ்த்துக்கள்.
விண்வெளி பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
புதுடில்லி: 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் - 4' என்ற திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, ஜூன் 10ம் தேதி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா செல்கிறார்.நாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் இணைந்து, 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p90v8tqb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த மே மாதம் 29ம் தேதி புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா செல்ல இருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று (ஜூன் 8) மாலை 6:41 மணிக்கு விண்வெளி மையம் செல்வதாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப பிரச்னையால் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் வரும் ஜூன் 10ம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா செல்கிறார். சுபான்ஷூ சுக்லா இந்திய விமானப்படையில் அனுபவம் வாய்ந்த விமானியாக இருந்தார். கடந்த 2 முறை தொழில்நுட்ப பிரச்னையால் பயணம் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போது அனைத்தும் முடிவுக்கு வந்தது என அறிவிக்கப்பட்டு உள்ளது.''28 மணி நேர பயணத்திற்குப் பிறகு, 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் - 4' என்ற திட்டத்தின் கீழ் ஜூன் 11ம் தேதி அன்று (இந்திய நேரப்படி இரவு 10 மணி) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுபான்ஷூ சுக்லா தலைமையிலான குழுவினர் சென்று அடைவார்கள்'' என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (நாசா) தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் அவருடன் செல்லும் மற்ற விண்வெளி வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும். வாழ்த்துக்கள்.
விண்வெளி பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.