உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான போக்குவரத்தில் புதிய சாதனை; ஒரே நாளில் 5 லட்சம் பயணிகள் பயணம்!

விமான போக்குவரத்தில் புதிய சாதனை; ஒரே நாளில் 5 லட்சம் பயணிகள் பயணம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரலாற்றில் முதல் முறையாக, நேற்று (நவ.,17) ஒரே நாளில் 5 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணித்துள்ளனர் என மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.குழந்தைகளாகட்டும், பெரியவர்களாகட்டும், விமானத்தில் பயணம் செய்வதற்கு தான் விரும்புவார்கள். டிக்கெட் விலை எப்படி இருந்தாலும் வாழ்வில் ஒருமுறையேனும் வானில் விமானத்தில் பறந்து விட வேண்டும் என்ற ஆசையும் பலருக்கு உண்டு. இதனால் விமானப்பயணத்தை விரும்பி வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட காரணங்களால் ரயில் பயணத்தை தவிர்த்து, விமான பயணத்தை விரும்பி வருவோரும் அதிகரித்து விட்டனர்.இதனால், உள்நாடு, வெளிநாட்டு விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வரலாற்றில் முதல் முறையாக, ஒரே நாளில் 5 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணித்த புதிய சாதனை நேற்று எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான புள்ளி விவரங்களை இந்திய விமான நிலைய ஆணையம் தமது இணையத்தில் வெளியிட்டு உள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

* வரலாற்றில் முதல் முறையாக, நேற்று (நவ.,17) ஒரே நாளில் 5 லட்சம் உள்நாட்டு பயணிகள் பயணம் செய்துள்ளனர்.* நவம்பர் 8ம் தேதி 4.9 லட்சம் பேரும், நவம்பர் 9ம் தேதி 4.96 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர்.* நவம்பர் 14ம் தேதி 4.97லட்சம் பேரும், நவம்பர் 15ம் தேதி 4.99 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர். * நவம்பர் 16ம் தேதி 4.98 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக விமானத்தில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மாதம் சராசரியாக ஒரு நாளைக்கு 3,161 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன. இது முந்தைய மாதத்தை விட ஒரு நாளைக்கு 8 விமானங்கள் அதிகம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதையும், மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரித்து வருவதையும் இது காட்டுவதாக உள்ளது. வரும் காலத்தில் விமான பயணத்திற்கான தேவை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தாமரை மலர்கிறது
நவ 19, 2024 00:39

இந்தியாவின் பொருளாதாரம் விண்ணை நோக்கி பறக்கிறது. பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. வேலை செய்ய விருப்பப்படும் இளைஞர்களின் பொற்காலம் இது. காங்கிரஸ் காலத்தில் ஆகாயத்தில் விமானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விட்ட குப்பனும் சுப்பனும் இன்று விமானத்தில் சுற்றுலா பயணம் செல்கிறார்கள். வீதிக்கு ஒரு கான்க்ரீட் வீடு இருந்த காலம் போய், இனி ஒவ்வொருக்கும் வீடு கட்டி வாழும் பாக்கியம் கிடைத்துள்ளது. திறமை உள்ளவர்களுக்கு இந்தியா சொர்க்கம் .


Ramesh Sargam
நவ 18, 2024 20:13

ஒரு பக்கம் ஒரு வர்க்கம் விமானத்தில் தினம் தினம் பறக்கிறார்கள். அந்த அளவுக்கு வசதி. மறுபக்கம், விமானத்தை தூரத்திலிருந்து பார்த்து ஒரு வர்க்கம் சந்தோஷப்படுகிறது. அந்த அளவுக்கு வசதி இல்லாத வர்க்கம். ஒரு காலத்தில் நான் சிறுவனாக இருந்தபோது, சென்னை விமான நிலையம் சென்று, விமானங்களை பார்த்து ஆனந்தப்படுவேன். அந்த காலத்தில் இன்றைய காலத்தில் இருப்பது போல செக்யூரிட்டி செக் என்பதெல்லாம் இல்லை. இந்த வேற்றுமையை ஏன் உண்டாக்கினார் அந்த இறைவன்? இன்றுவரை எனக்கு விடை கிடைக்கவில்லை.


Jagannathan Narayanan
நவ 19, 2024 06:50

Because people are not ready to work hard


Jay
நவ 18, 2024 19:39

இந்திய அளவு பொருளாதாரம் என்பது வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த பொருளாதாரத்தில் பங்கேற்று நாமும் முன்னேற வேண்டுமென்றால் டாஸ்மாக் கடை பக்கம் செல்லாமல் இருக்க வேண்டும். மதுவில் மயங்கி வானத்தைப் பார்த்து கிடந்தால் மேலே செல்லும் விமானம் தெரியும் ஆனால் அதில் பயணிக்க முடியாது.


ديفيد رافائيل
நவ 18, 2024 16:20

நான் aircraft technician work தான் பண்றேன். ஒருதடவை கூட Aircraft ல travel பண்ணல.


Ramesh Sargam
நவ 18, 2024 20:08

ஐயோ பாவம்.


Duruvesan
நவ 18, 2024 15:05

ஊரான் காசில் சுற்றிய சாதனை பெரிது


N Sasikumar Yadhav
நவ 18, 2024 15:47

உங்க திராவிட மாடல் மொதல்வரை இந்த மாதிரி கேலி செய்ய கூடாது என்ன இருந்தாலும் டமிலக மொதல்வர் அவரு


சொல்லின் செல்வன்
நவ 18, 2024 18:10

எல்லாத்துலயும் குறை கண்டுபிடிக்கிற டிசைன் என்ன டிசைனோ


புதிய வீடியோ