உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானை ஆதரித்ததால் வந்த வினை: அஜர்பைஜான், துருக்கியுடன் உறவை முறிப்பதாக இந்திய வர்த்தகர்கள் அறிவிப்பு

பாகிஸ்தானை ஆதரித்ததால் வந்த வினை: அஜர்பைஜான், துருக்கியுடன் உறவை முறிப்பதாக இந்திய வர்த்தகர்கள் அறிவிப்பு

புதுடில்லி: பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து இந்திய வர்த்தகர்கள் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.பாகிஸ்தானுக்கு எதிரான நம் ராணுவத்தின், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை துருக்கி அளித்தது அம்பலமாகி உள்ளது.பாக்., ராணுவம் நம் மீது ஏவிய ட்ரோன்களில், துருக்கி நாட்டின், 'அசிஸ்கார்டு சோங்கர்' வகை ட்ரோன்கள் இருந்ததை, நம் ராணுவ கர்னல் சோபியா குரேஷி உறுதிபடுத்தினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c88a3kh5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (மே 16) பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து இந்திய வர்த்தகர்கள் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இன்று, 24க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள் டில்லியில் கூடி இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவை எடுத்தனர்.இது குறித்து, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:துருக்கி மற்றும் அஜர்பைஜானுடனான அனைத்து வர்த்தகத்தையும், முடிவுக்குக் கொண்டுவர இன்று வர்த்தக கூட்டமைப்பின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காரணம் தெளிவாக உள்ளது. துருக்கி மற்றும் அஜர்பைஜான் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்தன. துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்தவொரு இறக்குமதி மற்றும் ஏற்றுமதியும் நடக்காது.இந்திய திரைப்படத் துறையும் துருக்கி மற்றும் அஜர்பைஜானில் தங்கள் படங்களைப் படமாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நாடு முழுவதும் 40,000க்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் முடிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. துருக்கி, அஜர்பைஜான் நாட்டிற்கு வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Bhaskaran
மே 20, 2025 08:40

அப்படி போடு அரிவாளை


jayaraj nagarajan
மே 17, 2025 16:15

மேற்படி இரு நாடுகளுக்கும் செல்லும் நபர்களின் பாஸ்போர்ட் கேன்சல் செய்யப்பட வேண்டும் அப்பொழுதுதான் அவர்களுக்கு நம் அருமை தெரியும்


Gajageswari
மே 17, 2025 05:29

நல்ல முடிவு வரவேற்கிறேன்


Natarajan Ramanathan
மே 16, 2025 20:49

துருக்கி எப்போதுமே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நாடுதான். அதை இப்போதுதான் நாம் புரிந்துகொண்டுள்ளோம். நமது நிரந்தர எதிரி பாகிஸ்தானும் துருக்கியும்தான்.


Rathna
மே 16, 2025 19:28

பொருளாதார வழிகள் மூலமே மூர்க்க நாடுகளின் முதுகு எலும்பை முறிக்க முடியும். சமாதானம் மூலம் அல்ல. இது தான் கடந்த 70 ஆண்டு வரலாறு சொல்கிறது.


கஜகுமார்
மே 16, 2025 18:09

2024 ல் துருக்கிக்கு நமது ஏற்றுமதி 7 பில்லியன். துருக்கியிலிருந்து இறக்குமதி 5 பில்லியன்ன் நு புள்ளி விவரம் சொல்லுது.


Samy
மே 16, 2025 17:58

Why there is no action against China?. Similar action need to be taken against China.


sundar
மே 16, 2025 19:46

சிரிப்பு காட்டாதீங்க நண்பா. சீனாவுடன் நமது வர்த்தக பற்றாக்குறை 10 லட்சம் கோடி. அதாவது, நாம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை விட, சேமிகண்டக்டர், எலக்ட்ரானிக் கூட்ஸ் இறக்குமதி செய்வது அதிகம். சீனாவுக்கு நாம் 10 லட்சம் கோடி கொடுக்க வேண்டியுள்ளது. இப்ப முறைத்தால், மொத்தமும் சொதப்பி விடும். பாரதப்பேரரசின் பிரதமர் மோடி அவர்கள் சரியான தருணத்தில் சரியான முடிவெடுப்பார்


James Mani
மே 16, 2025 20:21

முடியாது இப்ப


Pandi Muni
மே 16, 2025 17:47

பாகிஸ்தானை தேசத்துரோகிகளை ஆதரிக்கும் தி.மு.கவையும் நம் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.


SUBRAMANIAN P
மே 16, 2025 17:46

சரியான முடிவு.. இது இது இதுதான் வேண்டும்.. இதுபோல ஒற்றுமை அனைத்து மாநில மக்களிடமும், இந்தியாவை எதிர்க்கும் நாடுகளைப் புறக்கணிப்பதில் வேண்டும். இந்திய மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும், நுகர்வில் இந்திய சந்தை உலகிலேயே மிகப்பெரியது என்பதாலும் அதை எதிர்ப்பதால் ஏற்படும் இழப்பும் அதிகம் என்பதாலும், இந்தியாவின் வழிக்கு வரும் என்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றாலும் இழப்பு நமக்கு இல்லை. திண்டாடி தெருவில் நின்றால் தெரியும் இந்தியாவை எதிர்க்கும் நாடுகளுக்கு.


Sundar R
மே 16, 2025 17:30

The Bharat-Pakistan war has escalated by itself upto Turkey. All should take precaution. Coffee is not grown in the most parts of North India. 50% of the coffees are from Turkey. Let's switch to milk instead of Turkey. Even tea is a product packaged and sold by China. Both Tea and Coffee have temporarily gone far away from us. We have to find nate methods to deal harder with Turkey and Azerbaijan.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை