| ADDED : செப் 05, 2024 07:54 PM
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, இன்று பா.ஜ.,வில் ஐக்கியமானார். குஜராத்தை சேர்ந்தவர் ரவீந்திர ஜடேஜா,35, இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் சர்வதேச ஒருநாள் 'டி-20' போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். சமீபத்தில் சர்வதேச டி.20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன்,'' என்றார்.இந்நிலையில் கடந்த 2-ம் தேதி பா.ஜ.,வில் உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதையடுத்து ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, தனது ‛‛எக்ஸ்'' பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரவீந்திர ஜடேஜா பா.ஜ,, உறுப்பினர் அட்டையை பகிர்ந்துள்ளார்.இதில் பா.ஜ.,தேசிய தலைவர் ஜேபி நட்டா நடத்திய சிறப்பு முகாமில் ரவீந்திர ஜடேஜா பங்கேற்று கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரது மனைவி ரிவாபா, ஏற்கனவே குஜராத்தின் ஜாம்நகர் தொகுதி பா.ஜ.,எம்.எல்.ஏ.வாக உள்ளார். இன்று ரிவாபா பகிர்ந்துள்ளதன் மூலம் தன் கணவர் ரவீந்திர ஜடேஜாவும் பா.ஜ.வில் இணைந்துள்ளார்.