உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகின் கவனத்தை திருப்பிய இந்திய பாதுகாப்புத்துறை ; ராஜ்நாத்சிங் பெருமிதம்

உலகின் கவனத்தை திருப்பிய இந்திய பாதுகாப்புத்துறை ; ராஜ்நாத்சிங் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகம் சார்பில் 3 நாள் நடக்கும் மாநாடு இன்று தொடங்கியது. இதனை தொடங்கி வைத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவம் மற்றும் உள்நாட்டு ராணுவ உபகரணங்கள் தயாரிப்பு குறித்து பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4iqdq4z7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் பேசியதாவது; இன்று உலகமே நமது பாதுகாப்புத்துறையை திரும்பிப் பார்க்கின்றன. ஆபரேஷன் சிந்தூரின் மூலம் நமது ராணுவ வீரர்களின் வீரம் வெளிப்பட்டது. அதேபோல, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நமது ராணுவ தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு சர்வதேச ராணுவ செலவு 2.7 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம், மிகப்பெரிய வர்த்தகம் நமக்காக உருவாக இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் உலகின் பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம். மக்களின் வருமானத்தில் ஒரு பெரும் பங்கு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்படுவதால், நமது பொறுப்பு மிகவும் அதிகரித்துள்ளது. எனவே, பட்ஜெட்டை சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
ஜூலை 07, 2025 21:22

இந்தியா உலகின் நான்காவது பெரிய பணக்கார பொருளாதார நாடு. அதற்கு ஏற்றவாறு பாதுகாப்பு துறை செயல்படுகிறது. பாராட்டத்தக்கது.


ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 19:56

2003 இல் இந்திய விமானப்படை நவீன போர் விமானங்கள் தேவை என்று பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேட்டது 2014 வரை வாங்கவில்லை. கேட்டால் (துப்பாக்கி குண்டு வாங்க கூட?) அரசிடம் பணம் இல்லை என்று காங்கிரஸ் அமைச்சர் அந்தோணி பார்லிமென்ட்டில் கூறி அழுதார. இப்போது ரஃபேல் விமானங்கள் அனைவருக்கும் பதில் சொல்கின்றன.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 07, 2025 18:14

இறந்தவர்களை புதைத்த இடத்தில் புல் முளைத்து, பூ பூத்துவிட்டது. இன்னும் இந்த செய்தியை எவ்வளவு நாட்கள் சொல்லிக்கொண்டு திரிவார்கள்?


தஞ்சை மன்னர்
ஜூலை 07, 2025 17:43

இந்த கூடாரத்திற்கு மாட்டு கோமியத்தை ஒன்றும் தெரியாது அப்படி இருக்க இங்கே உட்கார அருகதை இல்லாத கூட்டம் இது


vivek
ஜூலை 07, 2025 20:44

தஞ்சை மன்னர் சரியான நஞ்சு மன்னர்.


தஞ்சை மன்னர்
ஜூலை 07, 2025 16:13

முதலில் உங்க கும்பலுக்கு என்ன தெரியும் இதெல்லாம் காங்கிரஸ் செய்து வைத்தது அது பெயர் சுட்டி கொண்டு திரியிறீங்க


தஞ்சை மன்னர்
ஜூலை 07, 2025 16:10

இது எல்லாம் காங்கிரஸ் உருவாக்கி வைத்தது உங்க கும்பலை என்ன செயது இருக்கு அதை சொல்லுமோய்