உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை: ராஜ்நாத் உறுதி

இந்திய நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை: ராஜ்நாத் உறுதி

புதுடில்லி: இந்தியாவுக்கு சொந்தமான ஒரு இஞ்ச் நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியாக கூறியுள்ளார்.இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளை சீனா கைப்பற்றி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை மத்திய அரசு மறுத்துள்ளது.இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவுக்கு சொந்தமான ஒரு இஞ்ச் நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற முறையில் உறுதியாக தெரிவிக்கிறேன்.இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் இடையில் நல்ல சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும். தற்போது, நான் இந்தக்கட்டத்தில் விவாதிக்க ஆரம்பித்தால், மக்கள் பெருமைப்படுவார்கள். ஆனால், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதால், அந்த விவரங்களை நான் வெளியிட விரும்பவில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anantharaman Srinivasan
மே 26, 2024 14:51

பச்சை பொய்...


Sankara Narayanan
மே 26, 2024 13:25

ராஜ் நாத்தின் கருத்து ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. சரி, காங்கிரஸ் ஆட்சியில்தான் சைனா நம் ப்ரதேசத்தை அபகரித்தார்கள் சொன்னால் கூட பிஜெபி தங்களுடைய ஆட்சியில் நிலத்தை மீட்க என்ன செய்தது? என்று தான் மக்கள் கருதுகிறார்கள்


Syed ghouse basha
மே 26, 2024 13:17

அப்போ சீன அருணாச்சல பிரதேசத்தில் பெயர் மாற்றம் செய்துள்ள பகுதிகள் அவர்கள் வசம் உள்ள பகுதிகள் எல்லாம் சீனாவுக்கு சொந்தமானதுனு சொல்றார் அப்போ பிரச்சினையே இல்லை னும் சொல்றாரு


ஆரூர் ரங்
மே 26, 2024 16:34

அப்போ நான் உங்க தெருவின் பெயரை மாற்றி என் பெயராக மாறிவிட்டேன். இனிமே உங்க தெரு என்னுடையது என்றால் என்னாகும்?


M Ramachandran
மே 26, 2024 12:36

காங்கரஸ் காரர்கள் நிநைய்யவு படுத்துவது அவர்கள் முன் தோன்றல் நேருவால் தாணமாகா சீனாவால் எடுத்து கொண்ட 54000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை பற்றி மோடி திரும்பி எடுப்பார் என்ற நம்பிக்கையில் கூறுகிறார்கள். நிச்சயம் திரும்பி எடுத்து கொள்ளப்படும் அதேபோல் திபேத்தும் திருப்பி தலைலாமா விடம் ஒப்படைக்க படும். அதற்க்கு பொறுமையாக இருங்கள். காங்கிரெஸ்ஸால் முடியாததை மோடி செய்வார்


அரசு
மே 26, 2024 12:19

தேர்தல் சமயத்தில் பேசும் பச்சை பொய்.


ஆரூர் ரங்
மே 26, 2024 11:38

இன்றுவரை இந்தியா சீன எல்லை முழுவதும் வரையறை செய்யப்படவில்லை. முழுமையாக ஒப்பந்தம் ஏற்படும் வரை எந்த இடம் யாருடையது. யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதைப் பேசி பயனில்லை.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ