உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓமன் நோக்கி புறப்பட்ட எண்ணெய் கப்பலில் பற்றியது தீ; 14 இந்திய மாலுமிகள் மீட்பு

ஓமன் நோக்கி புறப்பட்ட எண்ணெய் கப்பலில் பற்றியது தீ; 14 இந்திய மாலுமிகள் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 14 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீப்பற்றியது. கப்பலின் இயந்திரங்கள் பலத்த சேதம் அடைந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இந்திய கடற்படை வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். 14 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.இது குறித்து இந்திய கடற்படை, புகைப்படங்களுடன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய மாலுமிகள் 14 உள்ளிட்ட கப்பல் பணியாளர்களுடன், குஜராத் மாநிலம் காண்ட்லாவிலிருந்து ஓமன் நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலில், இயந்திர அறையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்திய கடற்படை வீரர்கள் முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 30, 2025 11:51

என்னப்பா ஆச்சு குஜராத் மாநிலத்துக்கு? சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 214 பேர் மரணம். இப்பொழுது அங்கிருந்து புறப்பட்ட எண்ணை கப்பலில் தீ விபத்து. நல்லவேளை உயிர் சேதம் எதுவும் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை