உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு

புதுடில்லி: ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நிமிஷா பிரியா, 36. இவர், மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். பல மருத்துவமனைகளில் நர்சாக பணிபுரிந்த அவர், பின், அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் தலைநகர் சனாவில் சொந்தமாக, 'கிளினிக்' துவக்கினார்.நிமிஷாவின் வருமானம், கிளினிக்கின் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு, அவருக்கு தலால் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. 2017ல், தலாலுக்கு மயக்க மருந்து கொடுத்து, பாஸ்போர்ட்டை மீட்கும் முயற்சியில் நிமிஷா இறங்கினார்.அதிக மயக்க மருந்து செலுத்தப்பட்டதால், தலால் உயிரிழந்தார். அவரை நிமிஷா விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டதாக கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2023ல், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நிமிஷா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. நிமிஷாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது, நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஏமனில் நிமிஷா பிரியாவால் கொல்லப்பட்ட தலாலின் குடும்பத்தாருடன், இந்திய மத தலைவர் அபுபக்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்திய அதிகாரிகள் ஏமனில் உள்ளூர் சிறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் அலுவலகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். வழக்கின் தொடக்கத்தில் இருந்தே, இந்த விஷயத்தில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி, அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இந்த சூழலில் தற்போது மரண தண்டனை ஒத்திவைக்க வழி வகுத்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

முயற்சிகள் தொடரும்!

இது குறித்து, நிமிஷா பிரியாவின் கணவர் டோமி தாமஸ் கூறியதாவது: நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். மரண தண்டனையைத் தடுக்க முயற்சிகள் தொடரும் என்று நான் நம்புகிறேன், என்றார். கடந்த 2014ல், நிமிஷா பிரியாவின் கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவுக்கு திரும்பினர். அந்த ஆண்டில் ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷா பிரியாவால் நாடு திரும்ப முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Raghavan
ஜூலை 15, 2025 21:32

தமிழே ததிங்கிணத்தோம் துண்டு சீட்டையே பார்த்து படிக்கத்தெரியது இதில் இவர் உருது ஆங்கிலத்தில் பேசி அவருடைய தண்டனையை நிறுத்திவைத்திருப்பாராக்கும்.


மோகன்
ஜூலை 15, 2025 20:46

தப்பா சொல்லாதீங்க சார். எங்கள் விடியல் நாயகன் மட்டும் இல்லேன்னா, இந்த தள்ளிவைப்பு நடந்திருக்காது.எங்க தலைவர் ஸ்டாலினின் சுட்டு விரல் அசைவில், ஈமான் அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. நன்றி தலைவர் ஸ்டாலின்.


தாமரை மலர்கிறது
ஜூலை 15, 2025 19:39

சொந்த நாடு சொர்க்க புரியாக இருக்கும்போது, வெளிநாட்டு மோகம் எதற்கு? வீணாக ஜெயிலில் வாட வேண்டியுள்ளது. பிஜேபி ஆட்சியின் பவரால், இவரது மரணம் நிறுத்தப்பட்டுள்ளது. வேறு நாட்டவராக இருந்தால், இந்நேரம் மேலே சென்று இருப்பார்.


visu
ஜூலை 15, 2025 19:25

இது போன்ற நாடுகளில் வேலைக்கு செல்வதை இந்தியா தடை செய்துள்ளது இவர் அதற்கு முன்பே அங்கு சென்றவர் எனினும் மக்கள் இதுபோன்ற தீவிரவாத நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்கலாம் இல்லாவிட்டால் இவங்க சம்பாதித்ததை விட அதிகம் செலவு செய்து திரும்ப நேரும். இல்லை இறக்க கூட நேரலாம்.


Easwar Kamal
ஜூலை 15, 2025 19:15

மலையாளிகள் வளைகுடா நாட்டில் செய்கின்ற அட்tuliyangal ஏராளம். மலையாளிகள் பேராசை பிடித்தவர்கள் அதனால் அவர்கள் நிலையில்லாமல் மேலே போய் கீழே விழுந்து விடுகிறார்கள்.


Indian
ஜூலை 19, 2025 13:14

கொலை செய்யும் நோக்கம் இந்த பெண்ணுக்கு இல்லை . அவளை அந்த ஏமன் நாட்டு காரன் பல வகைகளில் துன்பப்படுத்தி பாஸ்போர்ட் பிடுங்கி வைத்து கொண்டான் . இவள் அவனிடம் இருந்து பாஸ்போர்ட் எடுக்க செய்த காரியம் தவறாக போய்விட்டது ..


N Annamalai
ஜூலை 15, 2025 19:15

இதை செய்த பெரியவருக்கு நன்றி .அவர் விடுதலை பெற்றுத்தர வேண்டும் . நன்றி அத்தணை மனிதர்களுக்கும் .


raman
ஜூலை 15, 2025 18:14

அவர் செய்தது கொலையே .பணம் கொடுத்தால் விட்டு விடுவார்கள். ஆனால் நமது அரசாங்கம் கொடுக்க வேண்டாம். அவரின் சொந்த பந்தங்கள் ஊர் மக்கள் கொடுக்கலாம்


Venkatesan Srinivasan
ஜூலை 15, 2025 18:04

பாஸ்போர்ட் என்பது ஒரு வெளிநாட்டில் நமக்கு நம் நாடு வழங்கும் பாதுகாப்பு ஆவணம். அரபு தேசங்களில் மட்டுமே இப்படி பாஸ்போர்ட்டை அவர்களிடம் அடமானம் வைத்து வேலை செய்ய நிர்பந்தம் உள்ளது. மேலும் அந்த நாடுகளில் சட்ட திட்டங்கள் மற்றும் தண்டனைகள் மிகவும் கடுமை. மிகுந்த சுதந்திர மனப்பான்மை அல்லது சட்டத்தை மீறி செயல்படும் எண்ணம் கொண்ட நபர்கள் அங்கு செல்லாமல் இருப்பது நல்லது. இந்தியாவையே அரபு நாடு போல் மாற்ற சில கும்பல்கள் இங்கே துடித்து கொண்டு இருக்கின்றன. கேரள மக்கள் அரபு நாடுகள் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவர்கள். அங்கே சட்டங்கள் பெரும்பாலும் அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமே சாதகமான ஒன்று. வெளி நாட்டினர் குறிப்பாக ஆசிய தேச குடியேறிகள் மூன்றாம் தரமாக கருதப்படுவர். ஐரோப்பியர்கள் வெள்ளைக்காரர்கள் நடத்தப்படும் விதமே தனி. சீதோஷ்ண காரணம் தவிர்த்து இன்னபிற தங்கள் தனிப்பட்ட வாழ்வியல் காரணங்களால் அங்கு ஐரோப்பியர்கள் நீண்ட காலம் தங்கி இருக்க விரும்புவது இல்லை.


ராஜாராம்,நத்தம்
ஜூலை 15, 2025 19:40

இப்ப நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க. கமல் ஹாசன் நாலு வரியில் பேசுவதை கூட புரிந்து கொள்ளலாம் போல ஆனால் நீங்க எழுதிய இந்த நீண்ட நெடிய கொடிய கட்டுரையை படித்தாலும் ஒன்றும் புரியவில்லை


Ganesh
ஜூலை 15, 2025 18:01

Modi ஜி ஒண்ணும் பண்ணல, மத குரு தான் டிரை பண்றார்,சங்கிகள் உடனே வந்துட்டாங்க


Sudha
ஜூலை 15, 2025 20:42

அந்த பெண் கொலை செய்தாரா அல்லது தற்செயலா என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஓர் இந்தியர் தூக்கிலிடப்படுவது இந்தியாவிற்கு சங்கடம். எனவே இந்திய அரசு தலையிடுகிறது. இந்தியாவில் எந்த மத குருவும் பஹல்கம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வில்லை. ஆக மதகுரு என்று யாரும் இல்லை. தோற்றால் அது மோடி அரசு வென்றால் அது மதகுரு எனும் மதம் கண்டனத்திற்குரியது...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 15, 2025 16:30

தண்டனை உறுதி ..... பிறகு நிறுத்தி வைப்பு .... இப்படியே மாறி மாறி நடக்கிறது .... .செத்து செத்துப் பிழைப்பது இறப்பதை விடக் கொடுமை .........