உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புற்றுநோய் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள்: சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் ரகுராமன் கண்ணனுக்கு கவுரவம்

புற்றுநோய் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள்: சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் ரகுராமன் கண்ணனுக்கு கவுரவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சென்னை ஐஐடி முன்னாள் மாணவரான ரகுராமன் கண்ணனுக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் அமைப்பில் கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் செயல்படும் நேஷனல் அகாடமி ஆப் இன்வென்டர்ஸ் அமைப்பு, மனித குலத்தின் மேன்மைக்காக கண்டுபிடிப்புகளை உருவாக்கும் விஞ்ஞானிகளுக்கான உயர் அமைப்பாகும். இதில் உறுப்பினராக நியமிக்கப்படுவது, விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் கவுரவம். அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சியாளர் ரகுராமன் கண்ணன் இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. இவர் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய வழிமுறைகளை உருவாக்கியவர். தனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் தொடங்கியுள்ளார். இவர் தற்போது அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், அமெரிக்காவில், குறிப்பாக உலகளாவிய சுகாதார துறைகளில், அதிநவீன ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பை எடுத்துரைக்கிறது.நுரையீரல், கருப்பை, மார்பகம், கணையம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் சிகிச்சையில் இவரது கண்டுபிடிப்புகள் பேருதவியாக இருக்கின்றன. ரகுராமன் கண்ணன் சென்னை ஐஐடியில் வேதியியல் பிரிவில் எம்எஸ் பட்டம் பெற்றவர். இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Rathna
டிச 16, 2025 17:21

ஆரியன் திராவிடன் கண்பார்வை படாமல் இருந்ததால், நாட்டை விட்டு சென்றதால் பிழைத்தார். இங்கே குப்பை கொட்டி இருந்தால் ஒரு அரசாங்க குமாஸ்தாவாக சாதி பிரிவினையில், நடக்கும் ஊழலில் நாலாம் தர பித்தளையாக போயிருப்பார்.


M S RAGHUNATHAN
டிச 16, 2025 14:20

இவர் அந்த வகுப்பை சேர்ந்தவர் போல இருக்கிறதே. இவரை தமிழர் என்று கொண்டாட முடியாதே. தொண்டையில் சிக்கிய எலும்பு போல சில பலருக்கு எரிச்சல். அந்த சில பலர் gelusil எடுத்துக் கொள்ளலாம்.


Karthik
டிச 16, 2025 13:36

நம் நாட்டில் ஏன் இவருக்கு சரியான ஊக்கம் தரவில்லை என்று அரசு யோசிக்க வேண்டும்


Ramesh Sargam
டிச 16, 2025 12:22

ரகுராமன் கண்ணனுக்கு வாழ்த்துக்கள். இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு விதிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசிக்கவேண்டும். அவர் கட்டுப்பாட்டினால் திரு ரகுராமன் கண்ணன் போன்ற புத்திசாலிகள் இனி அமெரிக்காவில் நுழைய முடியாது. ஒருவிதத்தில் டிரம்பின் கட்டுப்பாடு இந்தியர்களுக்கு நல்லது. அவர்கள் இந்தியாவிலேயே சாதிக்கலாம்.


ramesh kumar
டிச 16, 2025 12:17

உழைப்பிற்க்கு கிடைத்த கௌரவம்....உழைப்பின் அளவுகோள் உங்களின் ஆராய்ச்சி விளைவுகளின் உயரத்தில் தெரிகிறது...மேலும் வளர்க...மானிடம் வாழ்வதற்கே....வாழ்த்துக்கள்...


sengalipuram
டிச 16, 2025 11:06

மற்ற சமூகத்தினரை இவர் போல் உயர்த்துவேன் என்று சொன்னால் பாராட்டலாம் . ஆனால், எந்த ட்ராவிடின் மாடல்அரசு மற்ற சமூகத்தினரை கோவிலில் மணி ஆட்ட பூசாரியாக ஆகி சமூக நீதி நிலை நாட்டுக்கிறேன் என்று உருட்டுகிறது . மக்கள் தான் தெளிவடைய வேண்டும் .


V Subramanian
டிச 16, 2025 10:16

இதற்கு முக்கிய காரணம் நீங்கள் அறிந்தது தான். எல்லா இடங்களிலும் இட ஒதுக்கீடு. நம் இந்திய மிகவும் பின்தங்க காரணம், திறமைக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஜாதி அடிப்படையில் எல்லாவற்றுக்கும் இட ஒதுக்கீடு. ஒரு உதாரணத்திற்கு சொல்லுகின்றேன். ஒரு வேளை அவர் இந்தியாவில் பணியாற்றியிருந்தால் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர் இட ஒதுக்கீட்டில் இவரை விட ஜூனியராக இருந்தாலும் பணி உயர்வு பெற்று முன்னேறி சென்று விடுவார் இவர் அவருக்கு கீழ் பணி செய்யவேண்டும். அவர் சொற்படி நடக்க வேண்டும். எவ்வளவு ஒரு கேவலமான சிஸ்டம் இந்தியாவில். திறமைக்கு மதிப்பும் மரியாதையும் இல்லாதவரை இந்தியாவின் நிலை கேள்விக்குறி தான். இதை சொன்னால் என்னை சங்கீம்பானுங்க. அவங்களுக்கு தெரிந்தது இது ஒன்னு தான். நானும் உங்களுடன் சேர்ந்து இந்தியாவுக்காக கவலைப்படுகிறேன். அது தான் என்னால் முடிந்தது.


Subramanian
டிச 16, 2025 10:51

மிகவும் சரியான கருத்து


chennai sivakumar
டிச 16, 2025 11:08

திறமை மற்றும் தகுதி அடிப்படை இந்தியாவில் நடைமுறைக்கு வருவது என்பது குதிரைக்கு கொம்பு முளைப்பதை போல. கவலைப்பட வேண்டியவர்களே கண்டும் காணாதது போல இருக்கிறார்கள். நீங்களும் நானும் கவலைப்பட்டால் நமது இரத்த அழுத்தம்தான் ஏறுமே தவிர வேறு ஒன்றும் நடக்க போவது இல்லை. இது சத்தியம்


ram
டிச 16, 2025 11:10

100 பெர்ஸன்ட் correct


Skywalker
டிச 16, 2025 12:14

True brother, but it's utterly sad and unfortunately to see this situation of our country, we might support whatever party we want, bjp, inc, etc but at the end of the day all parties irrespective of ideology, are corrupt, corruption is present due to low nationalism which is the root of all problems, from slums in cities to poor water supply, from polluted air to badly maintained railways, from poverty and unemployment to illiteracy


Vasu
டிச 16, 2025 10:14

சரியாக சொன்னீர்கள். முன்னோர் தமிழ் நாகரிகம் தெரிய வேண்டும் இது அவசியம். அது போல் இன்றய தமிழ் மனிதர்களின் உலக அளவிலான சாதனைகள் தமிழகதில் சொல்லப்பட வேண்டும். இந்த சாதனைகள் இன்று வாழும் உலகத்தில் உள்ளது. இதற்கு ஜாதி கண்ணாடி போட்டு பார்க்காமல் மற்றும் பெரியார் தான் இவர்க்கு படிக்க வைத்தார் என்று ஸ்டிக்கர் ஒட்டாமலும், நேர்மையாக சொல்லப்பட vendum


Barakat Ali
டிச 16, 2025 09:56

பாராட்டுக்கள் ........


v.sankar
டிச 16, 2025 09:37

உங்களுடைய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று மனித குலத்திற்கு நன்மை பயக்கும் விதத்தில் இருக்குமாறு இறைவனை வேண்டுகிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை