உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு; இடம்பிடித்த இந்திய பல்கலைகள்

உலகளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு; இடம்பிடித்த இந்திய பல்கலைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நடப்பு 2025ம் ஆண்டுக்கான உலகளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.உலகம் முழுதும், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், அதன் கல்வி தரம், மாணவர் -- ஆசிரியர் விகிதம், ஆசிரியர்கள் பெற்ற விருதுகள், சாதனைகள், மாணவர்கள் விகிதம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் தரம் பிரிக்கப்படுகிறது.அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான உலகளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், கடந்த 14 ஆண்டுகளாக முதல் இடத்தில் ஹார்வார்டு பல்கலை., உள்ளது. 2வது இடத்தில் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 2வது இடத்தில் உள்ளன. ஸ்டான்போர்டு பல்கலை மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலை 4ம் இடத்தில் உள்ளன. பிரின்ஸ்டன் பல்கலை 6வது இடத்திலும், சீனாவின் சிங்குவா பல்கலை 8வது இடத்திலும், யேல் பல்கலை 9வது இடத்திலும், ஜப்பானின் டோக்கியோ பல்கலை 10வது இடத்தில் உள்ளன. இந்திய அளவில் இந்திய அறிவியல் கழகம் சிறந்த கல்வி நிறுவனமாக உள்ளது. ஐ.ஐ.டி., டில்லி 2வது இடத்திலும், ஐ.ஐ.டி., மெட்ராஸ் 3வது இடத்திலும் உள்ளன. ஒடிசாவில் உள்ள சிக்ஷா ஓ அனுசந்தன் பல்கலை 4வது இடத்தில் உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், சிலி, மலேசியா, போலாந்து, போர்ச்சுகல், ஆகிய நாடுகள் முதல்முறையாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

சுரேஷ்சிங்
பிப் 20, 2025 11:13

மாடு உதைச்சிருச்சு. குழு மிரண்டிருச்சு.


K V Ramadoss
பிப் 20, 2025 04:46

மும்மொழித் திட்டத்தைபி பற்றி இங்கே பேசுவது, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுபோல .


Dr. Jai Ram
பிப் 19, 2025 21:13

இந்தியாவின் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் 201-250 இடத்தை பெற்றுள்ளது. முதல் 200 இடத்தில் எந்த இந்திய கல்வி நிறுவனமும் இல்லை. 201-250வது இடம் என்றால் 49 கல்வி நிறுவனங்கள் கூட்டாக 201வது இடத்தை பெற்றுள்ளது என்று அர்த்தம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 19, 2025 20:36

சிலி, மலேசியா, போலாந்து, போர்ச்சுகல், ஆகிய நாடுகள் முதல்முறையாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன ......... இது கவனத்தில் கொள்ளத்தக்கது .......


Ramesh Sargam
பிப் 19, 2025 19:56

தமிழகத்தில் அண்ணா பல்கலை கழகம் பாலியல் வன்கொடுமையில் நம்பர் ஒன் பல்கலை கழகமாக உலகளவில் இருக்கிறது. மேலும் நம்பர் டு, நம்பர் த்ரீ எல்லாம் கூட தமிழகத்தில் உள்ளன.


Rajathi Rajan
பிப் 19, 2025 19:51

ஐ.ஐ.டி., டில்லி 2வது இடத்தில் இருக்கிறது . ஆனால் சென்னை என்றும் மாறாது


Ramaswami Venkatesan
பிப் 20, 2025 01:54

இந்திய அளவில் 2வது இடம் .. உலகளவில் 201க்கு மேல்


Rajathi Rajan
பிப் 20, 2025 11:35

நான் சொன்ன கருத்து வேற??? ஆனா இங்க போடா பட்டு இருக்கும் கருத்து வேற? சங்கிகளின் பித்தலாட்டம் தான் இது?


Swaminathan
பிப் 19, 2025 19:35

இந்த செய்தி தொகுப்பின் தலைப்பினைப்பார்த்தவுடன் இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் எந்த இடங்களை வகிக்கின்றன என்று ஆவலுடன் படித்தேன். ஆனால் உலக அளவில் அவை எங்கு இருக்கின்றன என்ற செய்தி இல்லை. அதற்குப்பதிலாக இந்திய அளவில் வழக்கம்போல் இந்திய அறிவியல் நிறுவனம் முதல் இடம் என்றும் இந்திய தொழில்நுட்ப கழகங்கள் குறிப்பாக சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்ப கழகம் மற்ற இடங்களில் மூன்றாவது இடம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இவை உலக அளவில் எந்த இடங்களில் இருக்கின்றன எனத்தெரிவித்தால் சிறப்பாக இருக்கும்.


Ray
பிப் 19, 2025 22:36

சொல்லிக் கொள்ளும்படியிருந்தால் சொல்லியிருப்பார்கள். ஏன் கூவி கூத்தாடி கும்மாளம் போட்டிருக்க மாட்டார்களா என்ன? சிறிய டில்லி நகர் பகுதியில் நால்வகை படைகளையும் வைத்து பல ஆண்டுகளாக குருச்சேத்திர போர் நடத்தி தேர்தலில் வென்றதற்கே முச்சந்திகளெல்லாம் அல்லோகல்லப் பட்டதே பார்க்கவில்லையா? இப்படியொரு கூட்டம்.


Ray
பிப் 19, 2025 19:11

சிலி, மலேசியா, போலந்து, போர்ச்சுகல், ஆகிய நாடுகள் முதல்முறையாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தி. முதல் தலைமுறை பட்டதாரிகள்போல முயன்று முன்னேறியுள்ளார்கள் இது சாதாரண சாதனை அல்ல நிச்சயமாக பத்து மடங்கு உழைப்பில், கல்லில் நார் உரித்த கதையாக தான் இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம் . அவர்களை மேன்மேலும் வளர வாழ்த்துவோம்.


Bhaskaran
பிப் 19, 2025 19:08

தமிழ்நாட்டில்...?


Mohammad ali
பிப் 19, 2025 19:00

அண்ணா பல்கலைக்கழகம்?


சமீபத்திய செய்தி