உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரித்து உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.நாட்டை தன்னிறைவு பெற செய்யும் நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 'தன்னிறைவு இந்தியா ' மற்றும் ' மேக் இன் இந்தியா' திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதன்படி இந்திய நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி போடவும், முதலீடுகளை அதிகரிக்கவும், ஏற்றுமதி செய்யவும், இந்தியாவை சர்வதேச விநியோக சங்கிலியாக மாற்றவும், இறக்குமதிக்காக பிற நாடுகளை சார்ந்து இருக்கக் கூடாது என்பதற்காக, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மீது மத்திய அரசு கொண்ட ஆர்வம் காரணமாக, பாதுகாப்பு தளவாட உற்பத்தி இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. இதனால், முக்கிய பாதுகாப்பு உற்பத்தி சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் லாபமும் அதிகரித்து உள்ளது. ஏராளமான பாதுகாப்பு ஹப்களை அமைத்ததுடன், பாதுகாப்பு மற்றும் வான்வெளி உற்பத்தியிலும் மத்திய அரசு அதிக முதலீடு செய்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள், முக்கிய பாதுகாப்பு மற்றும் வான்வெளி தரவுகளை இந்தியாவுடன் பகிர்ந்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெடிமருந்துகள், ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியன 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2029 ம் ஆண்டிற்குள் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்துவது என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் பாதுகாப்பு துறை முன் எப்போதும் இல்லாத வகையில் வளர்ந்து வருகிறது. இதற்கு 'தன்னிறைவு பெற்ற இந்தியா' திட்டம் ஊக்கமளித்து வருகிறது. 2013- 2014 ம் நிதியாண்டில் ரூ.686 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாடஏற்றுமதி 2024- 2025ம் நிதியாண்டில் ரூ.23, 622 கோடியாக அதிகரித்து உள்ளது. இது 34 மடங்கு அதிகம் ஆகும்.மேலும்2020-21- ரூ.8,345 கோடி2021-22- ரூ.12,815 கோடி2022-23- ரூ.15,920 கோடி2023-24- ரூ.21,083 கோடி2024-25- ரூ.23,622 கோடி அளவுக்கு பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ஆகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Minimole P C
மே 17, 2025 07:54

All credits go to Modiji and Rajnath singh. Ofcourse to the concerned officials also. Defence equipments export is a very good area to improve. Margins are high due to high technology involved. Equipments and missiles like brahmos are to be manufactured in bulk and exported. Countries like Isreal, France, Check, Ruassia may be collaberated for modernised ones. Happy to know that Indian public sectors doing well and contribute to exports.


venugopal s
மே 15, 2025 06:57

அப்படியே ராணுவ தளவாடங்கள் இறக்குமதி எவ்வளவு செய்து உள்ளோம் என்பதையும் கூற முடியுமா?


Minimole P C
மே 17, 2025 07:44

Negative mind wont help.


ஆனந்த்
மே 14, 2025 22:24

வாழ்த்துக்கள்


ஷாலினி
மே 14, 2025 22:23

ஏற்றுமதி இன்னும் அதிகரிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை