உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகத்திற்கு வழிகாட்ட வேண்டியது இந்தியாவின் கடமை: மோகன் பகவத்

உலகத்திற்கு வழிகாட்ட வேண்டியது இந்தியாவின் கடமை: மோகன் பகவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' உலகத்திற்கு வழிகாட்ட வேண்டியது இந்தியாவின் கடமை. அது இந்தியாவின் பாரம்பரியத்தில் உள்ளது,'' என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசினார்.டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: மக்களுக்கு புதிய வசதி கிடைக்கிறது. அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அவை அனைவருக்கும் கிடைப்பது கிடையாது. ஒருவருக்கு குறையும் போது, மற்றொருவருக்கு அதிகரிக்கும். இது நீதி. உலகம் இரண்டு வழிகளில் சிந்திக்கிறது. இரண்டு பாதைகளை பின்பற்றினர். தற்போது, இந்தியா உடன் இணைந்து 3வது பாதையை தேர்வு செய்தனர். தற்போது, உலகத்திற்கு வழிகாட்ட வேண்டியது இந்தியாவின் கடமை. அது இந்தியாவின் பாரம்பரியத்தில் உள்ளது.நமது இயல்பிலும், மாண்பிலும் அஹிம்சை உள்ளது. ஆனால், நீங்கள் என்ன செய்தாலும் சிலர் மாற மாட்டார்கள். தொடர்ந்து உலகிற்கு தொல்லை கொடுப்பார்கள். அது பற்றி என்ன செய்ய வேண்டும். அஹிம்சை என்பது நமது மதம். குண்டர்களுக்கு பாடம் கற்பிப்பதும் நமது மதம். நமது அண்டை வீட்டாரை நாம் தொந்தரவு செய்வது கிடையாது. ஆனால், ஒருவர் தொந்தரவு செய்தால் என்ன செய்வது. அரசனின் கடமை மக்களை பாதுகாக்க வேண்டியது. அரசன் தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.முன்னதாக, நிகழ்ச்சி துவங்கியதும், காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Oviya Vijay
ஏப் 27, 2025 09:32

அப்படியானால் ஆர் எஸ் எஸ்ஸின் வாலை சுருட்டி வைத்துக்கொண்டு இருந்தாலே போதுமானது... நிரந்தர தீர்வுக்கு அது ஒன்றே வழி... இவ்வுலகில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் கூக்குரலிடும் நம் மனம் நிரந்தரமாக அதிலிருந்து விடுபட்டு இவ்வுலகில் அமைதி நிலவ நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என மட்டும் சிந்திக்கவே மறுக்கிறது... மற்றவர்கள் மட்டும் மாற வேண்டும் என விரும்பும் நம் மனம் நாமும் மாறினால் தான் நாம் நினைத்தது போல் இவ்வுலகம் சண்டை சச்சரவுகளின்றி அமைதியாய் மாறும் என எப்போது உணரப் போகிறதோ... காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...


அப்பாவி
ஏப் 27, 2025 06:52

இன்னும் ஓய்வு பெற வில்லையா?


pmsamy
ஏப் 27, 2025 05:57

நகைச்சுவைக்கும் ஒரு அளவு வேண்டும் இது ரொம்ப ஓவர்


thehindu
ஏப் 26, 2025 21:05

ஊருக்குத்தான் உபதேசமா .


Ramesh Sargam
ஏப் 26, 2025 21:03

ஆம் இந்தியா, பாக்கிஸ்தான் மீது போர் தொடுத்து, பாகிஸ்தான் நாட்டை தரைமட்டமாக்கி, அங்கே பதிய பாதையை அமைத்து, உலகத்திற்கு புதிய வழிகாட்டவேண்டும்.


J.Isaac
ஏப் 26, 2025 20:59

எல்லாம் பேச்சில் மட்டும் தான்


vivek
ஏப் 26, 2025 23:14

டாஸ்மாக் கிற்கு வழிகாட்டி நம்ம ஐசாக்


மீனவ நண்பன்
ஏப் 26, 2025 20:52

இங்கே சுடலை அங்கே மோகன் பகவத் ..காமெடி பண்றதுக்கே அளவில்லாமல் போட்டி போடறாங்க


முக்கிய வீடியோ