உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பல நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தை: ஏற்றுமதி அதிகரித்து வருகிறது என்கிறார் பியூஷ் கோயல்!

பல நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தை: ஏற்றுமதி அதிகரித்து வருகிறது என்கிறார் பியூஷ் கோயல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இந்தியாவின் ஏற்றுமதி சீராக அதிகரித்து வருகிறது. பல நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன'' என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தியாவின் ஏற்றுமதி நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக நான் தொடர்ந்து கூறி வருகிறேன். கடந்தாண்டை விட இந்த ஆண்டும் அதிகரிக்கும் என நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நியூசிலாந்து, சிலி, பெரு, ஓமன் மற்றும் பல நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதிகள் வேகமாக அதிகரித்து வருகிறது. இது மிகவும் சிறப்பு வாய்ந்த உறவு. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் தங்களது பங்களிப்பை வழங்குகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்

இந்த வாரம் தொடக்கத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. இந்த சூழலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

pakalavan
செப் 20, 2025 13:28

பிராடு


MARUTHU PANDIAR
செப் 20, 2025 12:06

வழிக்கு கொண்டுவர முடியாத டப் நெகோஷியேட்டர் இந்த கோயல் என்று அவர்கள் ஏற்கனவே நொந்து போயிருக்காங்க.


SANKAR
செப் 20, 2025 08:44

how much increase in exports to China?!


Mahendran Puru
செப் 20, 2025 07:40

நடப்பு பிரச்னைக்கு என்ன தீர்வு, அதற்கு என்ன நடவடிக்கை என்பது சொல்லத் அரசு, சொல்வதில் மட்டும் திறமை காட்டும் அரசு. முழுப் பூசணிக்காயை சாற்றில் மறைத்த கதை தான்.


Palanisamy Sekar
செப் 20, 2025 08:34

பெரிய பொருளாதார புலிதான் . மிக தெளிவாக அமைச்சர் கூறியுள்ள நிலையில் அதனைக்கூட புரிந்துகொள்ள முடியாத ராகுலை போல் இங்கே பேச வேண்டாமே.


முக்கிய வீடியோ